உங்களால் இங்கு பணியாற்ற முடியாது... அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த அதிமுக முக்கியப் புள்ளி
திருவண்ணாமலை: அதிமுக தொண்டர்கள் முன்வைக்கும் கோரிக்கையை செய்து கொடுக்காத அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்ற முடியாது முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஏற்கனவே வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தவர் இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இப்போது மீண்டும் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பொதுவெளியில் அவர் பேசியிருப்பது அரசு ஊழியர்கள் சங்கத்தினரை கொதிப்படைய வைத்துள்ளது.

மிரட்டல் பேச்சு
திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அரசு அதிகாரிகளை சீண்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கரைவேட்டி கட்டிக்கொண்டு வரும் தொண்டர்கள் முன்வைக்கும் கோரிக்கையை செய்து கொடுக்காத அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்ற முடியாது என பகிரங்கமாகவே எச்சரித்திருக்கிறார்.

பேச்சால் சர்ச்சை
இது மட்டுமல்லாமல் சம்பந்தமேயின்றி முதலமைச்சர் பெயரையும் இழுத்துவிட்டு அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, நகராட்சி ஆணையராக இருந்தாலும் சரி அல்லது பொறியாளர்களாக இருந்தாலும் சரி அதிமுகவினர் சொல்வதை செய்ய வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவு என வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

எம்.ஜி.ஆர் பாணி
அரசியல்வாதிகளை விட அதிகாரிகளை அதிகம் மதித்தவர் எம்.ஜி.ஆர். அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதும் கெட்ட பெயர் கிடைப்பதும் அதிகாரிகள் கைகளில் உள்ளதால் அவர்களை எப்போதும் உரிய கவுரவத்துடன் நடத்தினார் எம்.ஜி.ஆர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிகாரிகளை மதித்து அவர்களுடைய ஆலோசனைகள் பேரில் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் முதல்வர் பெயரை கூறி அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியிருப்பது தலைமைச் செயலகம் வரை எதிரொலித்திருக்கிறது.

அரசு ஊழியர்கள்
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இந்த மிரட்டல் பேச்சைக் கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒன்றியச் செயலாளராக இருந்த காலம் முதல் அதிகாரிகளுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications