Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டை ஓடுகளுடன் நின்ற கார்! "நானே கடவுள்" ஆடைகளை நீக்கிவிட்டு காவல் நிலையம் சென்ற அகோரியால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தேரடி வீதியில் மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அகோரி ஒருவரின் கார் 2 மணி நேரமாக நின்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பவுர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

thiruvannamalai aghori police

அது போல் திருவண்ணாமலை மாட வீதி, தேரடி வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதுக்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேரடி வீதியில் முருகர் தேர் பக்கத்தில் ஒரு கார் நின்றுக் கொண்டிருந்தது.

அந்த காரில் முன்பக்கத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான மண்டை ஓடுகள் இருந்தன. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் அச்சத்துடன் இருந்தனர். சிலர் காருக்குள் என்ன இருக்கிறது என்று கூட கண்ணாடி வழியாக பார்த்தனர்.

அந்த காரின் முன்பக்கத்தில் கைலாயத்தில் சிவன் அமர்ந்திருப்பது போல் அகோரி தனது உருவத்தை ஸ்டிக்கராக ஒட்டியிருந்தார். மேலும் காரின் முன் பக்கத்தில் டேன்ஜர் என எழுதப்பட்டு எலும்பு கூடு ஒட்டப்பட்டிருந்தது. அது போல் காரின் முன்பு அர்நாரீஸ்வரி என எழுதப்பட்டிருந்தது.

வண்டியை சுற்றிலும் சிவப்பு நிறத்தில் DANGER என எழுதப்பட்டு எலும்பு கூடும் இருந்தது. வாகனத்தில் நம்பர் பிளேட்டில் அகோரி நாகசாது என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த காரை சுற்றி கூட்டம் கூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீஸார் வந்தனர். அவர்கள் காரை ஆய்வு செய்துவிட்டு அந்த காரில் எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது மறுமுனையில் பேசிய நபரிடம் "காரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விட்டிருக்கிறீர்கள், உடனே வாருங்கள்" என அழைத்தனர்.

ஆனால் அவரோ ஒரு மணி நேரம் கழித்துதான் காரை நிறுத்திய இடத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது என் பெயர் கடவுள், நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு என கூறி ஆடைகளை களைந்து விட்டு காவல் நிலையத்திற்கு சென்றதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

thiruvannamalai aghori police

இதனால் அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரிஷிகேஷ் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும் கார் பார்க்கிங் செய்ய இடம் இல்லாததால் நடுரோட்டில் விட்டுவிட்டு கோயிலுக்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் அகோரி மீது வழக்குப் பதிவு செய்யாமல் ரூ 3000 அபராதம் விதித்த போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் முழுவதும் சாம்பல் நிறத்தை பூசிக் கொண்டு பிணத்தை அகோரிகள் சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது. அத்துடன் சுடுகாட்டில் பிணத்துடன் அவர்கள் உறவு கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அகோரிகள் தன்னில் சிவன் முழுமையடைந்து எல்லா வடிவங்களிலும் வியாபித்து இருக்கிறார் என எண்ணுகிறார்கள்.

thiruvannamalai aghori police

இவர்கள் பச்சை இறைச்சியை சமைக்காமல் அப்படியே சாப்பிடுகிறார்கள். கல்லறைகளில்தான் வசிப்பார்கள். சாதாரண மக்களுக்கு பிடிக்காத விஷயங்களை இவர்கள் பிடித்து செய்கிறார்கள். இறந்த சடலத்துடன் உறவு கொள்வதை சிவனையும் சக்தியையும் வழிபடும் முறையாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

அகோரிகள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். இவர் காசி, வாரணாசியில் அதிகம் இருக்கிறார்கள். அகோரிகள் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது இல்லை. இவர்கள் உயிருடன் இருப்பவர்களுடனும் உறவு கொள்கிறார்கள். பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போதும் அகோரிகள் உடலுறவு கொள்கிறார்கள். இது அவர்களுக்கு வலிமையை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். சிவனை பின்பற்றும் அகோரிகள் மண்டை ஓட்டை வைத்திருப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+