ஆரணியில் துணி துவைத்து கொண்டிருந்த பெண்! பின்னாடியே போன பாஜக பிரமுகர்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக நகர நிர்வாகி மதுபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.. உயிர் பயத்தில் மாடியில் இருந்து குதித்த இளம்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.. நடந்ததை அறிந்த கடைக்காரர்கள் குற்றவாளியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.. அப்படியென்ன நடந்தது ஆரணியில்?
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண்.. திருமணமாகி கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.. நேற்றுமுன்தினம் காலை இவரது கணவர் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.. வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டிவிட்டு மேல்மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்..

ஆரணி பாஜக பிரமுகர்
அப்போது ஆரணி விடிஎஸ் தெருவை சேர்ந்த பாஜக நகர நிர்வாகியான தர் வயது 33, வீட்டின் வெளிப்புற கேட் மீது எகிறி குதித்து மாடிக்கு சென்றார்.. துணி துவைத்துக்கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்று தனது ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.. இளம்பெண் கண்டித்து எச்சரித்தும் தர் பின்வாங்கவில்லை..
உயிர் பயத்தில் கத்தி கூச்சலிட்டபடி மேல்மாடியில் இருந்து பால்கனி வழியாக கீழே உள்ள கடைகளின் தகர கூரை மீது குதித்தார்.. லேசான காயங்களுடன் இளம்பெண் உயிர் தப்பினார்..
உயிருக்கு பயந்து மாடியிலிருந்து..
சத்தம் கேட்டு ஓடி வந்த கடைக்காரர்கள் இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.. நடந்தது என்னவென்று கேட்டறிந்த அவர்கள், மதுபோதையில் வீட்டிற்குள் இருந்த தரை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆரணி நகர போலீசில் ஒப்படைத்தனர்..
போலீசார் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவந்தன.. கடந்த சில நாட்களுக்கு முன்பே தர், கடைக்கு சென்று வரும்போது இளம்பெண்ணை வழிமறித்து தகராறு செய்து அத்துமீற முயன்றுள்ளார்.
தூக்கிய ஆரணி போலீஸ்
இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.. இதை அறிந்த குடும்பத்தினர் தரை கண்டித்தபோது மன்னிப்பு கேட்டதும் விசாரணையில் தெரியவந்தது.. கைது செய்யப்பட்ட தருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது..
போலீசார் வழக்குப்பதிவு செய்து தரை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.. வீட்டின் கதவை பூட்டிய நிலையிலும் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து தொல்லை கொடுக்கும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.. இதற்கு விடை கிடைக்க வேண்டுமானால், இதுபோன்ற வழக்குகளில் கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.. அது ஒன்றுதான் ஒரே வழி..!!!
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications