அம்மாவை அப்பாதான்.. தீ வச்சு கொளுத்துனாரு.. பதற வைத்த பேத்தி.. அதிர்ந்த தாத்தா.. கலெக்டரிடம் புகார்
மனைவியை தீ வைத்து கணவன் கொன்றதாக புகார் எழுந்துள்ளது
திருவண்ணாமலை: "அம்மாவை அப்பாதான் தீ வெச்சு கொளுத்தினாரு" என்று பேத்தி சொல்லவும் அதிர்ந்துவிட்டார் ஏழுமலை. இதையடுத்து கள்ள உறவை கண்டித்ததால், தன் மகளை எரித்து கொன்ற மருமகனை கைது செய்ய வேண்டும் என்று ஏழுமலை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரேணுகா. 7 வயதில் யோகிஸ்ரீ என்ற மகளும், ஒரு வயதில் தன்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

குஜராத்தில் உள்ள ராணுவ குவார்ட்டஸிலேயே இவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ரேணுகாவின் தந்தை ஏழுமலைக்கு ராணுவ அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது. சிலிண்டர் வெடித்து ரேணுகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள்.
இதனால் பதறியடித்து கொண்டு ஓடியது குடும்பம்.. ஆனால் ரேணுகா இறந்துவிட்டாள். மகளின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர், கிருஷ்ணாபுரத்துக்கு சடலத்தை கொண்டு வந்துள்ளனர்.. இறுதிச்சடங்கும் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான், குழந்தை யோகிஸ்ரீ "அப்பாதான் அம்மா மேல மண்ணெண்ணெய்யை ஊற்றி கொளுத்திட்டார்" என்று சொன்னாள்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன ஏழுமலையும், உறவினர்களும் உடனடியாக மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்பி ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். ரேணுகா சாவில் மர்மம் உள்ளதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் நடந்த விசாரணையில், நாகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகவும், அந்த உறவைக் கண்டித்ததாலேயும்தான் ரேணுகாவை கணவன் தீ வைத்து கொளுத்தியதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications