வில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை!
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டது
திருவண்ணாமலை: காதல் விவகாரத்தில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதற்கு 2 காரணங்கள்.. ஒன்று, இவர்கள் ஒரு கள்ளக்காதல் ஜோடி! இரண்டாவது, அண்ணியை இழுத்து கொண்டு போய் கொழுந்தன் கல்யாணம் செய்துள்ளார்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் விலாரிப்பட்டு என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்த தம்பதி சுரேஷ் - அகிலா. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர்களுக்கு கல்யாணம் ஆனது.

இவர்களது வீட்டுக்கு சுரேஷின் அண்ணன், அதாவது அவரது சித்தப்பா மகன் ஐயப்பன் என்பவர், அடிக்கடி வந்து போகவும் அகிலாவுடன் நெருக்கம் அதிகமானது.. இருவருக்கும் கள்ளக்காதல் பெருகியது.. ஒன்றாக வாழவும் முடிவு செய்தனர்.
ஆனால் ஊரில் இருந்தால் இது நடக்காது என்பதால், கடந்த மே மாதம் ஜோடியாக மிஸ் ஆனார்கள். இது தெரியாத உறவினர்கள், அகிலாவை காணோம் என்று அனைக்காவூர் ஸ்டேஷனில் புகார் தரவும், அவர்களும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ஊருக்குள் வந்தனர். ஆனால் வந்த நாளில் இருந்தே ஊர் பேசும் பேச்சை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் மனம் நொந்த இவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக கோவிலூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதிக்கு வந்தனர்.
அகிலா ஜூஸிலும், ஐயப்பன் மது பானத்திலும் எலி மருந்தை கலந்து குடித்துவிட்டு, இருவருமே அதே இடத்தில் பலியானார்கள். ஊருக்குள் சடலங்கள் விழுந்து கிடந்ததால், அனைக்காவூர் ஸ்டேஷனில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஒரு முக்கியமான விஷயம், அகிலா இறப்பதற்கு முன்பு புது தாலி கட்டியிருந்தார்!
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications