இந்த ஒரு மாவட்டத்திற்கு ஜாக்பாட்.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன சர்ப்ரைஸ் அறிவிப்பு.. பணம் கொட்டும்
திருவண்ணாமலை: தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் திருவண்ணாமலை மாவட்ட மலைவாழ் மக்கள் பயன்பெற அரசு அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் சிறப்புத் திட்டங்களான முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பட்டா மாற்றம், சான்றிதழ்கள், நிவாரண உதவித்தொகை உள்ளிட்டவை கோரி மக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திட்ட பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலுவைக்கான காரணம் குறித்து தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், நிராகரிப்புக்கான காரணம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திடீராய்வு மேற்கொண்டு, முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் தெரு மின்விளக்கினை சீரமைக்ககோரி மனு அளித்திருந்த புதுப்பாளையம், பசார் கிராமத்தைச் சேர்ந்த திரு. இளைய பெருமாள் என்பவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கோரிக்கை விவரங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அனைத்து அலுவலர்ளும் தங்களுக்கு வரும் மனுக்கள் மீது உரிய கவனத்துடனும், விரைந்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
பொதுமக்கள் பட்டா கோரி வழங்கும் விண்ணப்பங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நான் நேரில் சென்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கியுள்ளேன். எனவே பட்டா கேட்டு வரும் மனுக்களுக்கு உரிய ஆய்வு மேற்கொண்டு விரைந்து பட்டா வழங்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மலைவாழ் மக்கள் அதிகம் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்கள் பயன்பெற அரசு அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அரசு துறை அலுவலர்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று துணை முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), எம்.எஸ்.தரணிவேந்தன்(ஆரணி), சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி(செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), ஒ.ஜோதி (செய்யார்) பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்). மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர்.தாரேஸ் அகமது, இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை துணை செயலாளர் எம்.பிரதாப் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications