பிரபல ஹோட்டலில்.. பீட்ரூட் பொரியலில் "எலி தலை".. அலறி சிதறிய மக்கள்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
ஆர்டர் செய்த பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்துள்ளதால் ஓட்டல் முன்பு தர்ணா நடந்தது
திருவண்ணாமலை: பீட்ரூட் பொறியலில் எலி தலை இருந்துள்ளது.. சாப்பிட போனவர்கள் இந்த எலி தலையை பார்த்து அலறியுள்ளனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது புகார் தரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே, பிரபலமான ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இது ஒரு சைவ ஹோட்டல் ஆகும்.
ஆரணி காந்திநகர் பகுதியை சார்ந்த முரளி என்பவரின் உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அதனால், முரளியின் உறவினர் இறந்தவருக்கு படையலிட்டு வழிபட, இந்த ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர்.

பீட்ரூட் பொரியல்
அதன்படி, ஹோட்டல் தரப்பில் உணவுகளை டோர் டெலவரியும் செய்துள்ளனர். அந்த சாப்பாட்டை படையலிட்டு உறவினர்கள் சாப்பிட்ட பிறகு மீதமான உணவுகளை வேறு பாத்திரத்தில் மாற்றும்போது, பீட்ரூட் பொரியலில் எலி தலை துண்டு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்... இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு பார்வையிட ஹோட்டல் தரப்பினர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டென்ஷன்
இதனால், தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த முரளி, அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உறவினர்கள் எலிதலையோடு ஹோட்டலுக்கே நேரில் வந்துவிட்டனர்.. வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஹோட்டலின் வெளியே சாலையில் நின்று தர்ணாவில் ஈடுப்பட்டனர்... அதனை தகவல் அறிந்த நகர போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள்
உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஹோட்டலுக்கு சென்று உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.. இப்படித்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு, துருக்கி நாட்டின் அன்காரா நகரிலிருந்து, ஜெர்மனியின் டஸ்ஸல்டார்வ் நகரை நோக்கி ஒரு விமானம் சென்றுள்ளது.. அப்போது விமானத்தில் பயணிகளுக்கு காலை உணவு வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது.. அதில் ஒரு பயணி, தனக்கு தந்த உணவை சாப்பிட முயன்றார்..

பாம்பு தலை
அப்போது, அந்த உணவில் பாம்பின் தலை இருந்திருக்கிறது... விமானக் குழுவின் உறுப்பினர் ஒருவர் பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே நம்ம ஊரிலும் ஒரு ஷாக் சம்பவம் நடந்தது.. கோயம்பேடு அருகே உள்ளது அந்த பிரபல ஹோட்டல்.. இங்கு ஒரு பெண், தன்னுடைய மகனுடன் சாப்பிட சென்றார்.

சோலாப்பூரி + புழு
இவரது மகன், சோலாபூரி வேண்டும் என்று கேட்டதால், சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்துள்ளார்.. சிறிது நேரத்தில் சோலாப்பூரியும் வந்துள்ளது.. அப்போது அதை சாப்பிட முயன்றபோது, அதற்குள்ளிருந்து புழு நெளிந்து வருவதை கண்டு கத்தி கூச்சலிட்டார் அந்த பெண்.. உடனடியாக, சாப்பாடு தயாராகும் கிச்சனை பார்க்க வேண்டும் என்று அந்த ஹோட்டல் நிர்வாகிகளிடம் சொல்லி, உணவுகூடத்தினுள் சென்று பார்த்துள்ளார்.. அங்கு மிச்சம் வைத்திருந்த அந்த மைதாமாவில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கிடந்தன.. பிறகு போலீசுக்கும், உணவு துறை அதிகாரிகளுக்கும் தகவல் பறந்தது, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பிரியாணியில் புழு
இந்த சம்பவம் நடந்த அடுத்தநாளே, சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை ஒன்றில், புழுக்கள் பிரியாணியில் மிதந்துள்ளன.. சாப்பாடு விஷயத்தில் இதுபோன்ற அஜாக்ரதைகளும், அதிர்ச்சிகளும் தொடர்ந்ததால், வாடிக்கையாளர்கள் நொந்து போயுள்ளனர்.. ரோட்டோர கடைகளில் சுகாதாரம் பெருமளவு இருப்பதில்லை என்பதால்தான், ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்கள்.. ஆனால், ஹோட்டலுக்குள்ளேயே இந்த கதி என்றால், நாமெல்லாம் என்னதான் செய்வது? எங்குதான் போவது?
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications