வந்தவாசி வியந்துடுச்சு.. அதென்ன கிரேனில் 15 அடி நீளத்துல இருக்கு.. ஒரேநாளில் திகைக்க வைத்த தாய்மாமன்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், நேற்றுமுதல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. அப்படி என்ன நடந்தது வந்தவாசியில்?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.
அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..

மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, உசிலம்பட்டி, சேலம், தஞ்சாவூர் பகுதிகளில் நடந்த காதணி விழா நடந்து, அந்தந்த சுற்றுவட்டார மக்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது..
திருமணம், காதுகுத்து, என்றாலே தென் மாவட்டங்கள்தான் படுஃபேமஸ்.. விசேஷங்களுக்கு செய்முறைகளை செய்து அசத்திவிடுவார்கள்.. அதிலும் "தாய்மாமன் சீர்" என்றாலே, இதில் கூடுதல் விசேஷம் உண்டு.. இப்போதும் அப்படி ஒரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது..
வந்தவாசியை அடுத்துள்ளது புன்னை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சாமி அய்யப்பன்.. இவரது அக்காவுக்கு திருமணமாகிவிட்டது.. கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த அக்காவுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. 3 குழந்தைகளுக்குமே காதணி விழாவை நடத்த முடிவு செய்துள்ளார். இதற்காக வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
தாய்மாமன்: இந்த விழாவில், சாமி அய்யப்பன்தான் முக்கிய நபர் என்பதால், தன்னுடைய அக்கா குழந்தைகளுக்கான தாய்மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று ஆர்டர் செய்தார்.. அந்த மாலையை கொண்டு வருவதற்காகவே, கிரேன் ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.. 15 அடி உயர மாலையை கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றார்...
வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக இந்த கிரேன் மாலை சென்றது.. இதைத்தவிர, மேளதாளங்களும், பட்டாசுகளும் சுற்றுவட்டார பகுதிகளில் எதிரொலித்தவாறே இருந்தது..
அசத்தல்: டிராக்டர் டிரெய்லரில் 3 பெண் குழந்தைகளையும் உட்கார வைத்து, 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றார் தாய்மாமன்.. கிரேன் மூலம் எடுத்து சென்ற மாலையை, சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றார்கள்.. டூவீலரில் சென்றவர்கள், பைக்கை நிறுத்திவிட்டு, அந்த கிரேன் மாலையை பார்த்து வியந்தனர்.. இந்த ஒரே காரியத்தினால், மொத்த பேரையும் ஆச்சரியப்படுத்தவிட்டார் வந்தவாசி தாய்மாமன்.












Click it and Unblock the Notifications