குழந்தை என் ஜாடையில் இல்லை.. யாருக்கோ பிறந்தது.. சந்தேக வெறியில் தந்தை செய்த கொடூர கொலை!
சந்தேகம் காரணமாக 3 மாத குழந்தையை பெற்ற தகப்பனே கொலை செய்தார்.
திருவண்ணாமலை: "குழந்தைக்கு என் ஜாடையில இல்லை... இது எவனுக்கோ பிறந்த குழந்தை" என்று சந்தேகம் மண்டைக்கேறிய பெற்ற தகப்பன், அந்த குழந்தையை அரிவாளால் கொன்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி கார்த்திகேயன் - ராஜேஸ்வரி. இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. கடந்த அக்டோபர் மாதம்தான் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் சர்வேஸ்வரன்.
எப்பவுமே புருஷன்-பொண்டாட்டிக்குள் சண்டை இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக ராஜேஸ்வரி மீது கார்த்திகேயனுக்கு நிறைய சந்தேகம். இந்த சந்தேகம்தான் பெற்ற குழந்தைவரை வன்மம் வர காரணமாக அமைந்துவிட்டது.

அதிக வெறுப்பு
5 வருஷம் கழித்து குழந்தை பிறந்தாலும், அதன்மீது ஒருவித வெறுப்பு காட்டி கொண்டே இருந்தார் கார்த்திகேயன். குழந்தை தன் ஜாடையில் இல்லை என்று சொல்லி இதைவைத்தும் தம்பதிக்குள் சண்டை நீடித்து வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமான வெறுப்பு அடைந்த கார்த்திகேயன் குழந்தையை கொல்லவே துணிந்துவிட்டார்.

அரிவாளால் வெட்டினார்
நேற்றுமுன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்த கார்த்திகேயன் திடீரென எழுந்து, பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த பெற்ற குழந்தையை அரிவாளை கொண்டு வெட்டி கொலை செய்தார். இதில் குழந்தையின் உடல் துண்டு துண்டாக சிதறியது. இதை பார்த்து ராஜேஸ்வரி அலறி துடித்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தப்ப முயன்ற கார்த்திகேயனை சுற்றி வளைத்து பிடித்து வாணாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் சொன்னதாவது:

எவனுக்கோ பிறந்தது
"என் மனைவி மேல எனக்கு ஏற்கனவே நிறைய சந்தேகம் இருந்தது. அதனால் இந்த குழந்தை எனக்கு பிறந்திருக்காது என்று தோன்றியது. எவனுக்கோ பிறந்த குழந்தை, நாளைக்கு என்னை அப்பான்னு கூப்பிடுவதை என்னால ஏத்துக்க முடியாது.

விறகு வெட்டும் அரிவாள்
அதனால் அவனை கொன்னுடலாம்னு முடிவு பண்ணேன். இதை என் மனைவி, அப்பா கிட்ட கூட சொன்னேன். ஆனால் நான் கிண்டல் செய்றதா அவங்க நினைச்சிட்டாங்க. ஒரு கட்டத்துல ஆத்திரம் அதிகமாகி, வீட்டுல விறகு வெட்ற அரிவாளை எடுத்து குழந்தையை வெட்டி கொலை செய்துவிட்டேன்" என்றார். இதையடுத்து கார்த்திகேயனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

முகஜாடை
பொதுவாக குழந்தை பிறந்தால், குறைந்தது 6 மாசத்துக்கு முக ஜாடை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் பிறந்து 3 மாசம்தான் ஆகுது, அதுக்குள்ள எப்படி முகஜாடை தெரியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பச்சை குழந்தையை இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications