திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலட்சுமிக்கு முகமெல்லாம் வெட்கம்.. ஒரே சிரிப்புதான்..மஞ்சள் நீராட்டு விழாவுக்கு திரண்ட திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சிறுமிக்கு கிராம மக்கள் மஞ்சள் நீராட்டு விழா நடத்தி உள்ளனர்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: வரலட்சுமிக்கு நடந்த மஞ்சள் நீராட்டு விழாவை பார்த்து ஆரணியே மூக்கின் மேல் விரலை வைத்து கொண்டது.. அப்படி என்ன ஸ்பெஷல்?

சில மாதங்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. அந்த தம்பதியின் மகனுக்கு உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இதனால் 16 வயதில் இருந்தே ஹார்மோன் மாற்றத்தால் தான் திருநங்கையாக மாறவேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது.

அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி

ஆனால், அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால், வீட்டை விட்டே வெளியேறி விட்டார் அந்த சிறுவன்.. தன்னுடைய பெயரையும் நிஷா என்றே மாற்றி வைத்து கொண்டார்.. ஒரு ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தார் அந்த சிறுவன்..

ஆபரேஷன்

ஆபரேஷன்

இதற்கு பிறகு, மகனை பிரிந்து இருக்க முடியாமல் அவரை தேடி கண்டுபிடித்தனர் அவர் பெற்றோர்.. திருநங்கையாக மாறுவதற்கு ஆபரேஷனும் செய்து கொள்ள சம்மதித்தனர். நிஷாவிற்கு ஆபரேஷனும் முடிந்துவிட்டது.. பொதுவாக, இப்படி ஆபரேஷன் முடிந்த பிறகு திருநங்கைகள் சேர்ந்து சடங்குகளை செய்வது வழக்கம்.. ஆனால் நிஷாவின் பெற்றோரோ, பெண்களுக்கு செய்யும் மஞ்சள் நீராட்டுவிழா போல் நிஷாவிற்கு அலங்காரம் செய்து கொண்டாடினர்... இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்துக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயசீலன்.. 47 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் ராஜேஸ்வரி.. இவர்களுக்கு, 17 வயதில் சக்திவேல், 15 வயதில் ரஞ்சித், என்ற இரண்டு மகன்களும், 11 வயதில் வரலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.. 10 வருடங்களுக்கு முன்பேயே மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.. ஜெயசீலன் தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரும் இறந்துவிட்டார்..

பூப்பெய்தினார்

பூப்பெய்தினார்

பிள்ளைகள் எல்லமே சிறு வயது என்பதால், அந்த கிராம மக்களே ஒன்று கூடி, அவரது சடலத்தை அடக்கம் செய்தனர். அவர் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புதான், சிறுமி வரலட்சுமி பூப்பெய்தினார்.. அதன் பிறகு அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பெற்றோர் இல்லாததால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது... இதையடுத்து, கிராம மக்களே ஒன்று கூடி, வரலட்சுமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.. இந்த தகவல் தெரிந்ததுமே, ஈரோட்டை சேர்ந்த, 'நாங்க இருக்கோம்' என்ற அமைப்பும், கரூரிலுள்ள சேவை சங்கம் அமைப்பை சேர்ந்தவர்களும் விழாவிற்கு வந்துவிட்டனர்..

 நெகிழ்ச்சி - வரலட்சுமி

நெகிழ்ச்சி - வரலட்சுமி

வரும்போதே வரலட்சுமிக்கு புது டிரஸ், மேக்கப் பொருட்கள் என 21 தட்டுகளில் சீர்வரிசையாக கொண்டு வந்து தந்தனர்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, முன்னாள் அமைச்சரும், ஆரணி அதிமுக எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், வரலட்சுமி வீட்டுக்கே வந்துவிட்டார்.. சிறுமி வரலட்சுமிக்கு சீர்வரிசை செய்து மனமார வாழ்த்தினார்... இப்படி ஊர்மக்களும், சமூக அமைப்புகளும், முக்கிய பிரபலமும் ஒன்று கூடி மஞ்சள் விழா நடத்தியதில், வரலட்சுமி நெகிழ்ந்து போய்விட்டார்..!

English summary
happy and excellent function manjal neeraattu vizha near thiruvannamalai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X