தீயில் எரிந்து நிர்வாண கோலத்தில் ஓடி வந்த அக்கா.. குழந்தையும் கொலை.. கள்ளக்குறிச்சியில் பகீர் தங்கை!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் 20 சென்ட் இடத்துக்காக உடன் பிறந்த அக்கா மற்றும் அவரது ஒரு வயது குழந்தையை அரிவாளால் வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு சுமதி, சுஜாதா என்ற மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் சின்னசாமி வெவ்வேறு ஊர்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இளைய மகள் சுஜாதா பிரசவத்திற்காக தனது அப்பா சின்னசாமி வீட்டிற்கு வந்து தங்கி இருந்த நிலையில் தற்போது மூன்று மாத ஆண் குழந்தையும் இருந்து வந்தான். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பத்தில் திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டில் வசித்து வந்த சின்னசாமியின் மூத்த மகள் சுமதி தனது ஒரு வயது மகள் ஸ்ரீ நிதியுடன் தனது தந்தை சின்னசாமி வீட்டிற்கு வந்துள்ளார்.

உடலில் வெட்டுக்காயம்
சின்னசாமி கூலி வேலைக்கு பெங்களூரு சென்று விட்ட நிலையில் அம்மா மயிலு வயல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அக்கா சுமதியும் தங்கை சுஜாதாவும் தங்கள் குழந்தைகளோடு இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சம்பவத்தன்று மதியம் ஒரு மணி அளவில் சுமதி தீயில் எரிந்த நிலையில் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாண கோலத்தில் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் ரத்தம் கொட்டியவாறும் அலறி துடித்து வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அதே வேளையில் சுமதியின் குழந்தை ஸ்ரீ நிதியும் தீயில் எரிக்கப்பட்டு தீக்காயங்களுடன் அலறித் துடித்து கொண்டு இருந்துள்ளது.

குழதையும் பலி
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சுமதிக்கு ஆடை அணிவித்து 108 ஆம்புலன்சை வரவழைத்து சுமதியையும் அவரது குழந்தையையும் முதலில் அருகிலுள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், அதனைத் தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்த குழந்தை ஸ்ரீநிதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. குழந்தை ஸ்ரீநிதியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

பேய் பிடித்ததால் சாவு
அசகளத்தூர் கிராமத்தில் தாயும் அவரது குழந்தையும் தீயில் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுமதியின் அப்பா சின்னசாமி பெங்களூரில் இருந்து வந்து தனது மகள் சுமதி பேய் பிடித்ததால் தன்னைத்தானே கொடுவாளால் வெட்டிக் கொண்டும், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் என்றும் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்..

தீ வைத்து எரித்தார்
இது சம்பந்தமாக புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தநிலையில் இன்று அசகளத்தூரில் உயிரிழந்த சுமதி மற்றும் அவரது குழந்தை ஸ்ரீநீதி ஆகியோரின் சடலத்தை சாலையில் வைத்து இறந்து போன சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் சம்பவத்தன்று சுமதிக்கும் அவரது தங்கை சுஜாதாவிற்கும் வீட்டிற்குள் சண்டை நடந்துள்ளது எனவும் ஆத்திரத்தின் உச்சியில் சுமதியும், குழந்தை ஸ்ரீநிதியும் கொலை செய்யப் பட்டுள்ளனர் எனவும் எனவே உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசில் சிக்கினார்
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுமதியின் தந்தை சின்னசாமி சொந்தமாக 20 சென்ட் நிலம் வாங்கியுள்ளதாகவும் அதனை பெறுவதில் சுமதி மற்றும் சுஜாதா இருவர் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறை தொடர்ந்து சுமதி மற்றும் சுமதியின் ஒரு வயது ஸ்ரீநிதியையும் அரிவாளால் வெட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சுஜாதா கொலை செய்து தெரியவந்தது. இதனையடுத்து சொத்துக்காக அக்கா மற்றும் அக்காவின் மகளை அரிவாளால் வெட்டியும் தீயில் எரிந்து கொலை செய்யதாகக்கூறி சுமதியின் தங்கை சுஜாதாவை வரஞ்சரம் போலீசார் கைது செய்துள்ளனர்.அசகளத்தூரில் சொத்திற்காக அக்கா மற்றும் அவரது ஒரு வயது குழந்தையை கொலை செய்த தங்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications