துடித்துப்போன கேபிஒய் பாலா.. திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இன்று கேபிஒய் பாலா திருவண்ணாமலை வஉசி நகருக்கு சென்று இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு ரூ.2 லட்சம் வழங்கினார்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டியது. சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் கடந்த 1ம் தேதி தீபம் ஏற்றும் மலை பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
வீடுகள் மண்ணில் புதைந்தன. ராஜ்குமார் என்பவர் வீட்டில் இருந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். ராஜ்குமார், அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி தொடங்கி நடந்தது.
மழை மற்றும் மின்தடை உள்ளிட்டவற்றால் மீட்பு பணி தாமதமானது. நிலச்சரிவில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியாததால் அவர்கள் இறந்தனர். மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டது. 3 நாள் மீட்பு பணிக்கு பிறகு அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தான் திருவண்ணாமலை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கேபிஒய் பாலா இன்று நேரில் சென்று பார்த்தார். அதன்பிறகு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை கேபிஒய் பாலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்கள் சேர்ந்த 4 குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் என்று மொத்தம் ரூ.2 லட்சத்தை கேபிஒய் பாலா வழங்கி உதவி செய்தார்.
முன்னதாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications