Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி போல் அசுர வளர்ச்சி.. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நேற்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று அதைவிட அதிகமான நேரம் ஆகிறது. ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை வந்த வண்ணம் இருப்பதால் திருப்பதி போல் திருவண்ணாமலை அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. சரியான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரை தரிசனம் செய்ய தினமும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இது வழக்கமான ஒன்று தான். அதேபோல் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். இதுவும் வழக்கமானது தான். ஆனால் அதேநேரம் அண்மை காலங்களில் தெலுங்கானா, ஆந்திராவில் வாழும் தெலுங்கு மக்கள் பல்லாயிரம் பேர் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இயல்பைவிட அதிகமான கூட்டம் திருவண்ணாமலைக்கு வருகிறது.

Tiruvannamalai temple Tirupati

அருணாசல மலை பொறுத்தவரை சிவபெருமானே மலையாக உருவானதாக நம்பப்படும் 'அக்னி ஸ்தலம்' ஆக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இங்கு மலை உருவத்திலேயே சிவன் இருப்பதாக மக்கள் நம்புவதால், கிரிவலம் செல்வதை பலரும் விரும்புகிறார்கள். இதனால் தான் தான் தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

திருவண்ணாமலையை பொறுத்த சிவபெருமானின் மலை என்பதுடன், சித்தர்கள் நிறைந்த பகுதியாகும். ரமண மகரிஷி போன்ற மிகப் பெரிய ஞானிகளால் புகழ் பெற்றுள்ளளது. தெலுங்கு பேசும் மக்கள் ரமண மகரிஷியைச் "சாதனா மார்க்கத்தின்" மிக முக்கியமான குருவாகப் பார்க்கின்றனர். எனவே திருவண்ணாமலை வரும் தெலுங்கு மக்கள் அருணாசல மலையைச் சுற்றி ரமணாஸ்ரமம் மற்றும் சேஷாத்திரி ஆசிரமங்களுக்குச் சென்று தியானம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த காரணங்களால் சமீப காலமாக திருப்பதி போல் திருவண்ணாமலையும் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே திருவண்ணாமலை நகரை ஆன்மீக சுற்றுலாதலமாக மாற்றுவதற்கு அரசு பெரிய அளவில் கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கில் செல்கிறார்கள். எனவே அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அசம்பாவிதம் நிகழாத அளவிற்கு கவனமாக கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அதேபோல் சென்னையில் இருந்து எளிதாக செல்லும் வகையில் போதுமான ரயில் வசதிகள், ரயில் நிலையத்தில் லட்சக்கணக்கனோர் வந்து செல்வதற்கு ஏற்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், நகரத்தில் சிறப்பான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மிக தூய்மையான அழகான ஊராக திருவண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி செய்தால் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், திருவண்ணாமலை மக்களின் வாழ்வாதாரமும் பெரிய அளவில் மேம்படும்.

பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனத்திற்கு சென்றவர்கள் ராஜகோபுரம் வழியாகவும், ரூ.50 கட்டண தரிசனத்திற்கு சென்றவர்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்குமேல் ஆனது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. எனினும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றார்கள். கிரிவலப்பாதையில் உள்ள இடுக்குபிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். இன்று பவுர்ணமி கிரிவலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+