லாரி டிரைவருக்கு திருவண்ணாமலை ஷர்மிளா மீது வந்த குபீர் சந்தேகம்.. கணவனின் கண்ணில் பட்ட வீடியோ! ஷாக்
திருவண்ணாமலை: ரீல்ஸ் மோகத்துக்கு இளைய தலைமுறையினர் பலரும் அடிமையாகிவிட்டனர்.. சிலர் தங்களை தாங்களே அழித்து கொள்ளும் அபாயத்துக்கும் சென்று விடுகிறார்கள். சிலசமயம் இந்த ரீல்ஸ் மோகம், அவர்களின் உயிரையே பறித்துவிடுகின்றன.. எனினும், ரீல்ஸ் வீடியோ மீதான ஆர்வம் குறையவில்லை.. பெண்கள் பலரும் ரீல்ஸ் வீடியோவை பதிவிடுவதில் ஆர்வம் காட்டும் நிலையில், தங்கள் குடும்பத்தையும் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். பல குடும்பங்கள் இதனால் பிரியும் கொடுமையும் நடக்கிறது. இதோ சென்னையில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்துள்ளது இடையன்குளத்தூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் விஜய்.. 27 வயதான விஜய், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஷர்மிளா.. இவருக்கு 25 வயதாகிறது.

திருவண்ணாமலை ஷர்மிளா
விஜய், ஷர்மிளா இருவருமே கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இப்போது இந்த தம்பதிக்கு ஹன்சிகா என்ற 4 வயது மகளும், ஆஜீஸ் என்ற 3 மகனும் உள்ளனர்.
விஜய் டிரைவர் வேலை பார்ப்பதால், பல நாட்கள் வெளியூர்களுக்கு சென்றுவிடுவாராம்.. ஒருமுறை லாரியில் லோடு ஏற்றிச்சென்றால் திரும்பி வர 15 நாட்கள் கூட ஆகிவிடுமாம்.. தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து செல்வதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் தொழில் நிமித்தமாக செல்ல வேண்டி உள்ளதே என்று அரைமனதுடன் செல்வாராம்.
லாரி டிரைவருக்கு சந்தேகம்
இதனால் மனைவி ஷர்மிளாவின் நடத்தையில் சந்தேகமும் ஏற்பட்டு வந்துள்ளது.. மேலும், ஒவ்வொரு முறை லோடுக்கு சென்றுவிட்டு, 10, 15 நாட்கள் கழித்து திரும்பி வந்ததுமே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஷர்மிளா குறித்து விசாரிப்பாராம்.
அப்போது அக்கம்பக்கத்தினர், வீட்டிற்கு யாரோ ஒருவர் அடிக்கடி வந்துசெல்வதாக விஜய்யிடம் சொன்னதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த விஜய்க்கு, இதைக் கேட்டதுமே தலையே சுற்றியிருக்கிறது.. உடனே இதுகுறித்து ஷர்மிளாவிடம் கேட்டுள்ளார்..
அப்போதிருந்தே தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. ஒவ்வொரு முறை சண்டை நடக்கும்போதும், கணவரிடம் கோபித்து கொண்டு, ஷர்மிளா அதே பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா ராணிபாத்திமா வீட்டிற்கு சென்றுவிடுவாராம்.
மாமியார், மனைவி
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதிக்கு தகராறு வந்துள்ளது.. அப்போது விஜய் ஆத்திரத்தில் ஷர்மிளாவை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார்.. தன் கண் முன்னாடியே மகளை மருமகன் தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த ராணிபாத்திமா, விஜய்யை கண்டித்துள்ளார்.
இதற்கு பிறகு, விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, ஷர்மிளாவும், ராணிபாத்திமாவும், உறவினர்களுக்கு தகவல் தந்தனர்.. ஆனால், அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும், விஜய் தற்கொலை செய்திருக்க மாட்டார், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக நினைத்தனர்.. உடனே சேத்துப்பட்டு போலீசிலும் இதுகுறித்து உறவினர்கள் புகார் தந்தனர்..
இதையடுத்து போலீசார் தாய், மகளை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போதுதான் பகீர் வாக்குமூலத்தை ஷர்மிளாவும், அவரது தாயும் போலீசில் தந்தனர்.
கள்ளக்காதலனுடன் ரீல்ஸ்
அதாவது ஷர்மிளாவுக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கிறாராம்.. அவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளார்.. இது விஜய்க்கு பிடிக்கவில்லை.. இதனால் மனைவியை கண்டித்து அறிவுரை சொல்லி வந்துள்ளார்..
சம்பவத்தன்றும் கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து ஷர்மிளா பதிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்க மாமியார் வீட்டுக்கு விஜய் சென்றுள்ளார்.
அங்கு ஷர்மிளாவிடம் ரீல்ஸ் வீடியோ பற்றி கேட்கவும், தம்பதிக்குள் மறுபடியும் தகராறு வந்துள்ளது.. அப்போதுதான், ராணிபாத்திமா, ஷர்மிளா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டு கட்டையாலும், கம்பியாலும் மிக கொடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.. இறுதியில் விஜய்யின் கழுத்தை கயிற்றால் கட்டிப்போட்டு, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொன்றுவிட்டார்களாம்..
தாய், மகள் கைது
இது தற்கொலை போல தெரிய வேண்டும் என்பதற்காக விஜய்யை ஜன்னலில் தூக்குமாட்டி விட்டார்களாம்.. இவ்வளவும் வாக்குமூலமாக போலீசார் தந்ததையடுத்து, ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரீல்ஸ் எடுக்கக்கூடாது என்று தடுத்த கணவரை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கொன்றுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications