ஆரணி இல்லை.. வேலூருக்கு மாறிய மன்சூர் அலிகான்! பிரபலத்திற்காக லோக்சபா தொகுதியை மாற்றுவதாக அறிவிப்பு
திருவண்ணாமலை: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுவதாகவும், எனவே மன்சூர் அலிகான் வேலூரில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மன்சூர் அலிகான் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து வெளியிட்டிருந்த அறிக்கை பெரும் கவனம் பெற்றிருந்தது. அதாவது, "மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுகவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி!

அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ன பட்சினியே, நினை, என் மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் ஆரணியில் போட்டியிடப்போவதில்லை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயகப் புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுகிறார். ஆரணியில் நிற்பதாக இருந்த நடிகர் மன்சூரலிகான் இப்போது வேலூரில் நிற்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 24ம் தேதி சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், "மக்களவைத் தேர்தலில் எனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications