பைசா செலவில்லாமல் முதலாளி ஆகலாம் - ஸ்டாலினின் ‘ வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் பற்றி தெரியுமா?
திருவண்ணாமலை: வறுமையின் பிடியில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு சின்ன உதவிக் கிடைக்காதா? அதைப் பற்றிக் கொண்டு மேலே வந்துவிடமாட்டோமா? என மனதளவில் வாடிப் போய் கிடப்பார்கள். அப்படியான வர்க்கத்தை வாழவைப்பதற்காகவே செயல்பட்டு வரும் திட்டம்தான் 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்'.
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பார்கள். ஆனால், அப்படித் திக்குத் தெரியாத காட்டில் தவிப்பவர்களுக்குத் திசை காட்டும் விளக்காக இந்தத் திட்டம் விளங்கி வருகிறது.
அதனால் பயனடைந்தவர்கள் தமிழ்நாட்டில் லட்சக் கணக்கில் இருப்பார்கள். அதற்கு ஒரு சான்றாக இன்று சாதித்து முன்னேறி இருக்கிறார்கள் இருவர். ஒருவர் கணவரை இழந்து பரிதவித்து வந்த கஸ்தூரி. மற்றொருவர் தொழில் கரையேற முடியாமல் தத்தளித்த தேவக்குமார். இந்த இருவரும் எப்படி வெற்றி பெற்றார்கள்? என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என்றால் என்ன?
அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' பற்றி சில விஷயங்களைச் சொல்வது கட்டாயம். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கியின் நிதியுடன் செயல்படும் திட்டம். இது ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டதாகும். வறுமை ஒழிப்பு என்பதைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து, ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது,அதற்காக நிதியுதவி செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது ஆகியவை இதன் இலக்கு ஆகும்.
ஒவ்வொரு முறையும் திமுக அரசு ஆட்சிக்கு வரும் போதும் இதனை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்துள்ளது. இதனை நாம் சொல்லவில்லை. உலக வங்கியே பாராட்டியுள்ளது. இந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் இதனால் பலரும் பயன்பெற்றுள்ளனர். அதற்கான சான்றாக இந்தத் திருவண்ணாமலை மக்கள் உள்ளனர். இதன்மூலம் கடன்பெற்ற இவர்களது வாழ்வு வளம்பெற்றுள்ளது.
அதில் ஒருவர்தான் இந்தக் கஸ்தூரி. இலங்கை அகதியான இவர் இன்று தொழில்முனைவோராக முன்னேறி இருக்கிறார். அதற்கு முழுக் காரணம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம். அது குறித்து கஸ்தூரியே பேசுகிறார், படியுங்கள். "நான் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதிக்கு உட்பட்ட தென்பள்ளிபட்டு என்ற கிராமத்தில் வசிக்கிறேன். நான் ஒரு இலங்கைத் தமிழர். நாங்கள் 1990இல் எனது அம்மா, அப்பா தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான். இங்கேதான் படித்தேன். திருமணம் ஆனதும் இங்குதான்.

கணவரை இழந்த கஸ்தூரி முதலாளியான கதை:
எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணத்திற்குப் பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக ஒரு மனநிலை இருந்தது. நாமே ஏதாவது சுய தொழில் கற்றுக் கொள்ளலாம் என விரும்பி, அழகுக்கலை கற்றேன். அதற்காக 6 மாதம் படிப்பை முடித்தேன்.
அதன் பின்னால் எனக்குக் குழந்தைப் பிறந்துவிட்டது. ஆகவே அந்தத் துறையில் தொடர்ந்து ஈடுபடமுடியவில்லை. அதையொட்டி கொரோனாவும் வந்துவிட்டது. அதில் என் கணவர் இறந்துவிட்டார். அவரது இழப்பு என்னை மனரீதியாகப் பாதித்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன்.
அதன்பின்பு திருவண்ணாமலை ஊரில் வேலைக்குச் சென்றேன். மாதம் 8 ஆயிரம் கிடைத்தது. அந்த வருமானம் போதவில்லை. எனக்கு இரட்டைக் குழந்தைகள். அவர்களை இந்தப் பணத்தை வைத்து வளர்ப்பது கஷ்டமாக இருந்தது.
பியூட்டிஷன் துறையில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு அதிக நேரம் வேலை இருக்கும். காலை 9 மணிக்குச் சென்றால், வீடு திரும்ப இரவு 9 மணி ஆகிவிடும். என் வேலையையும் பார்த்துக் கொண்டு, என் இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது பெரிய சவாலாக இருந்தது.
அதற்காகத்தான் என் ஊர் அருகேயே ஒரு அழகுநிலையம் ஆரம்பிக்கலாம் எனத் தீர்மானித்தேன். நாயுடு மங்களம் என்ற ஊரில் கடையை ஆரம்பித்தேன். இதைத் தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது.
இந்த அழகுநிலையத்தைத் தொடங்க, எனக்குப் பணப்பற்றாக்குறை இருந்தது. நிறைய வங்கிகளுக்குச் சென்று நான் கடன் உதவிக் கோரினேன். எவ்வளவோ முயன்றும் கடன் உதவிக் கிடைக்கவில்லை.
அதன்பிறகுதான் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் பற்றிக் கேள்விப்பட்டு விண்ணப்பித்தேன். அந்த அதிகாரிகள் உடனே உதவி செய்தார்கள். நாயுடு மங்களம் இந்தியன் வங்கி மூலம் எனக்குக் கடனும் கிடைத்தது. அந்தக் கடன் தான் என் வாழ்நாளில் பெரிய நிதிச் சுமையைக் குறைப்பதாக அமைந்தது.
அந்தக் கடன் உதவியை வைத்து என் கடைக்குத் தேவையான பல உபகரணங்களை வாங்கினேன். அன்றைக்கு நான் 8 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்தேன். இன்றைக்கு என் கடையில் ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொண்டு அவருக்கு மாதம் 8 ஆயிரம் சம்பளம் கொடுத்துவருகிறேன்.
எனக்குக் கிடைத்த இந்த உதவியைப் போல பலருக்கும் கிடைக்க வேண்டும் இல்லையா? ஆகவே, 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' மூலம் நிறையப் பெண்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறேன். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவி வருகிறேன்" என்கிறார்
இன்று கஸ்தூரி, சொந்தக் காலில் நிற்கிறார். ஒரு தொழில்முனைவோராக மாறி இருக்கிறார். இதை எல்லாவற்றையும்விட, இந்தச் சிறு கிராமத்திலிருந்து கொண்டு மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

வீடு தேடி வந்து உதவிய அதிகாரிகள்:
சமுதாய திறன் கல்வி மூலமாகப் பல வகுப்புகள் நடைபெற்று வருவதை, கஸ்தூரிக்கு இந்தத் திட்டத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகள்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதில், இவர் ரவிக்கையில் முத்துகள் பதிப்பது, வேறுசில அலங்காரங்களைச் செய்வது எனப் பல நுட்பங்களைக் கற்றுக் கொண்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க இவருக்கு 30% மானியம் கிடைத்துள்ளது. கணவரின் இழப்பால், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த கஸ்தூரியின் கண்களைத் திறந்துள்ளது இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
அதுவும் வீடு தேடி வந்த வரப்பிரசாதமாக அதிகாரிகளே சென்று உதவி உள்ளனர். ஆகவே, 'என் வாழ்நாள் உள்ளவரைத் தமிழக அரசுக்கு நன்றிக் கடன் பட்டவளாகவே இருப்பேன். இத்திட்டம் மூலம் எனக்கு மறுவாழ்வு அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி' என்கிறார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தபடி கஸ்தூரி.
இது குறித்து அதிகாரி ப.வசந்தகுமார், "வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மொத்தம் 31 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. அதாவது உலக வங்கியின் நிதி உதவியுடன், சுமார் 131 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் இத்திட்டம் இயங்கி வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும் 30% நிதியை அளித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 6 ஒன்றியங்களில் இத்திட்டம் இயங்கி வருகிறது. அதாவது 308 ஊராட்சிகளில் இது செயல்படுகிறது.
இத்திட்டம் மூலம் தொழில்முனைவோரை உருவாக்கி வருகிறோம். தொழிற்பயிற்சியும் தருகிறோம். அதற்காகப் பயிற்சியாளர்கள் இத்திட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். வட்டார அளவிலும் ஒன்றிய அளவிலும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இதைத்தவிர, இணை மானியமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 35 வயது வரையான இளைஞர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். மாற்றுத்திறனாளியாக இருந்தால் கூடுதலாக 5 வயது வரை பலன்பெறும்படி சலுகை அளித்துள்ளோம்" என்கிறார்
இத்திட்டம் குறித்து திமுக மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், "திருவண்ணாமலையில் இலங்கை மக்கள் வாழும் முகாம் பகுதி இருக்கின்றது. அந்த முகாமிலே கணவரை இழந்த கஸ்தூரி வாழ்ந்துவருகிறார். அடுத்த வேலை உணவுக்கே கஷ்டம் என்ற வறுமையில் அவர் வாடி வந்தார். அவருக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நிதி அளித்தோம். இன்றைக்கு அவர் 5 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் அளவுக்குச் சமுகத்தில் உயர்ந்திருக்கிறார்" என்கிறார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு:
இத்திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆராய, தமிழ்நாடு முழுவதும் ஆய்வை மேற்கொண்டுள்ளார் அமைச்சர் உதயநிதி. ஆட்சியர்கள் ஒரு திட்டத்திற்கு நிதியை அளித்துவிட்டால் மட்டும் போதாது, அது உரியப் பயனாளிக்குப் போய்ச் சேர்க்கிறதா எனத் தொடர்ந்து களத்திற்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.
அந்தவகையில் ஆய்வுகள் நடைபெறும் போது அதிகாரிகள் மேலும் கூடுதலாக வேலை பார்ப்பார்கள். திட்டத்தின் இலக்கும் எட்டப்படும். அதனடிப்படையில் உதயநிதியின் ஆய்வு பல மட்டங்களில் பயனளிப்பதாக மாறி இருக்கிறது என்கிறார் அவருடன் களப்பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர்.
தேவக்குமார். இவர் கீழ்பெண்ணாத்தூர், கோணலூரைச் சேர்ந்தவர். அவர் தனக்கு இந்தத் திட்டம் எந்தவகையில் பயனுள்ளதாக அமைந்தது என்பதைக் குறித்து விவரித்தார். தேவக்குமார் நம்மிடம், "நான் 2002இல் கணினித் துறையைத் தேர்வு செய்தேன். டிடிபி ஆபரேட்டராக என் வேலையை முதன்முதலாகத் தொடங்கினேன்.
அதன்பின் படிப்படியாகக் கணினி சார்ந்து படிக்கத் தொடங்கினேன். 2006ல் மேற்கொண்டு பட்டம் படிக்கத்தொடங்கினேன். முதலில் எம்.சி.ஏ., படித்தேன். பிறகு பி.எட்., முடித்தேன். அடுத்து 2011இல் ஒரு கடை வைப்பதற்கு முயன்றேன். சின்ன முதலீடு மட்டுமே இருந்ததால், கடையைப் பெரிய அளவுக்கு விஸ்தரிக்க முடியவில்லை.
பிறகுக் கிராமத்திலிருந்து கடையைத் திருவண்ணாமலை, திருவள்ளூர் நகருக்கு மாற்றினேன். என்னுடைய போதாத நேரம் கொரோனா ஊரடங்கு தொடங்கிவிட்டது. என் கிராமத்திலிருந்த திருவண்ணாமலை 12 கி.மீட்டர். அங்கிருந்து பயணித்து வந்து கடையைத் திறக்க முடியாத சூழல். ஊரே முடங்கிக் கிடக்கும் போது நான் மட்டும் எப்படிப் பயணிக்க முடியும்?
என் மனைவி அபிராமி சுய உதவிக்குழுவில் உள்ளார். அவர் மூலம்தான் இந்த 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' பற்றித் தெரியவந்தது. அதற்காக நடைபெறும் வகுப்பில் போய் பங்கேற்றேன்.

இதுவரை ஆறு கோடி கடன் உதவி:
அதில் சிறுதொழில் செய்பவர்களுக்கு மானியம் மூலம் கடன் தருவதாகச் சொன்னார்கள். அதுவும் மானியத்துடன் தருகிறார்கள் என்றார்கள். அந்த முதலீட்டைக் கொண்டுதான் கடையைத் தொடங்கினேன். மொத்தம் 5 லட்சம் கிடைத்தது.
அதன் பிறகுதான் என் தொழிலில் முன்னேற்றம் என்பதையே கண்டுள்ளேன். இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் பல ஆயிரம் மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் காட்டி வருகின்ற முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. அதைச் சரியாக எங்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகளுக்கும் நன்றி" என்கிறார் இந்த அபி கம்ப்யூட்டர் முதலாளி தேவக்குமார்.
இது குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் இ.ஆ.ப., "திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் இத்திட்டம் மூலம் 85 பேருக்கு நிதியளித்துள்ளோம். இந்த 2022-23இல் 271 பேருக்குக் கடன் கொடுத்துள்ளோம். ஏறக்குறைய மூன்று மடங்குக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். ஆறு கோடி அளவுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது" என்கிறார்
-
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications