திருவண்ணாமலை அரசு ஊழியர்களுக்கு பறந்து வந்த ஆர்டர்.. ஒரே நாளில் 16 அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்த ரபியுல்லா போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், போளூரில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மேற்கு ஆரணிக்கு திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரிந்த 16 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டிருக்கிறார். அதன்விவரம் வருமாறு: திருவண்ணாமலை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்த ரபியுல்லா போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போளூரில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மேற்கு ஆரணிக்கு திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Order received by Tiruvannamalai government employees 16 officers transferred in a single day

மேற்கு ஆரணியில் பணியாற்றி வந்த தசரதராமன் அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) இடமாற்றப்பட்டுள்ளார். அதேநேரம் அங்கு பணியாற்றிய இந்திராணி ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதேபோல், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜேஸ்வரி, கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலசபாக்கத்தில் பணியாற்றிய அண்ணாமலை ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றப்பட்டுள்ளார். ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றியுள்ள கலெக்டர், வெம்பாக்கத்தில் பணியாற்றிய ஆர்.குப்புசாமி பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரத்தை சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்து கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். சேத்துப்பட்டில் பணியாற்றிய வேலு அதே அலுவகத்தில் திட்ட பிரிவிற்கும் மாற்றப்பட்டிருக்கிறார். சேத்துப்பட்டில் திட்ட பிரிவில் பணியாற்றிய வெங்கடேசன் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) தெள்ளாரில் பணியாற்றிய ராஜன்பாபு கலெக்டர் அலுவலக மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டிருக்கிறார். வந்தவாசியில் பணியாற்றிய பரணிதரன் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் அதே இடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) பணியமர்த்தப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+