பட்டியலின மக்கள் வந்ததால் தனி கோவில் கட்டும் ஆதிக்கசாதியினர்! இதுதான் திராவிட சாதனையா? சீமான் ஆவேசம்
திருவண்ணாமலை: தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலை கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வந்து வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்டத் தொடங்கியுள்ளனர். இச்செயலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் ஆதித்தொல்குடி மக்கள் சென்று வழிபட்டதால் அங்குள்ள ஒரு பிரிவினர் தனியாகக் கோவில் கட்டத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கும் தற்காலத்திலும், சாதியெனும் நோய்பிடித்து சகமனிதனை ஒதுக்கிப் புறந்தள்ளும் போக்குகள் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரே மொழி பேசி, ஒரு தாய் வயிற்று மக்களாய் இரத்தமும் - சதையுமாக, உயிரும் - உணர்வும் கொண்டு நம்முடன் வாழும் சக மனிதர்களை ஒதுக்கி வைக்கும் இத்தீண்டாமைச் செயல்பாடு துளியும் ஏற்புடையதல்ல. எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய வழிபாட்டுத்தலங்களே சாதி எனும் சனாதனக்கட்டமைப்புக்கு இரையாகியிருப்பது மானுடம் வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிநிலையாகும்.
தமிழ்நாடு அரசினுடைய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அக்கோவிலுக்குள் செல்லவே ஆதித்தொல்குடி மக்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதுதான் சாதியொழித்து, சமத்துவம் வளர்த்த திராவிட கட்சிகளின் 57 ஆண்டுகால ஆட்சியின் சாதனையாகும். திராவிடத்தின் ஆட்சியில் சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை புரையோடியதோடு மட்டுமில்லாது, அவை பரிணாம வளர்ச்சியினைப் பெற்று, வெவ்வேறு வடிவங்களில் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு, இன்றுவரை நிலைகொண்டிருப்பது திராவிட அரசியல் கோட்பாட்டின் படுதோல்வியையே காட்டுகிறது.
சாதியத்துக்கு எதிராக வீரியமாகச் செயல்பட்டு அதனை வீழ்த்த முற்படாது, வெற்று மேடை முழக்கமாய் சாதியொழிப்பு பேசி, அடையாள அரசியலும், விளம்பர அரசியலும் செய்ததோடு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், அற்ப அரசியல் லாபத்திற்காகவும் மறைமுகமாக சாதிப்பிரிவினைகளை வளர்த்தெடுத்த திராவிடக் கட்சிகளே தமிழ் மண்ணில் தற்போது நிகழும் சாதிய வன்முறைகளுக்கு முழுப்பேற்க வேண்டும்.
ஆகவே, தென்முடியனூர் மாரியம்மன் கோயிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதோடு, சாதி அடிப்படையிலான ஒதுக்கல் செயல்பாடுகளை கைவிடச்செய்து, ஒரே கோவிலில் அனைத்துத் தரப்பு மக்களும் வழிபாடு செய்யும் வகையில் சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என ஆளும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications