"அரண்ட" திருவண்ணாமலை.."ஆபீசர்" வீட்டுல பேய் இருக்காமே.. அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுதாமே, பாத்தீங்களா
திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் நடப்பதையெல்லாம் கேள்விப்படும்போது, கிலியை கிளப்புகிறது.. இதெல்லாம் உண்மையா என்றும் தெரியவில்லை.. என்ன சொல்கிறார்கள் அந்த பகுதி மக்கள்?
நல்ல சக்தி ஒன்று இருக்கிறதென்றால், தீய சக்தியும் இருக்கத்தானே செய்யும் என்கிறார்கள்.. அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பேய் ஓட்டுவதும், பேய்களை கட்டுப்படுத்துவதும் என ஸ்பெஷல் பூஜைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..
ஆனாலும், சுடுகாட்டு பகுதியில் பேய் நடமாடுகிறது என்பதுபோய், இப்போது, நகர்ப்புறத்துக்குள்ளேயே பேய்கள் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இதனால், அந்த பேய்க்கு பயந்து வீடுகளை காலி செய்யும் நிலைமையும் இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் உருவாகி உள்ளது.

வாடகை வீடுகளுக்கு செல்பவர்கள்கூட, "இந்த வீட்டில் இதுக்கு முன்பு, யாராவது தற்கொலை செய்திருக்கிறார்களா? வயசு பொண்ணு யாராவது இறந்துவிட்டார்களா?" என்ற கேள்விகளையும் சைஸாக கேட்டு தெரிந்து கொள்ளவே செய்கிறார்கள். இதனால் வீட்டு வாசற்படியில் வேப்பிலை கட்டுவது, வாசற்படியிலேயே செருப்பு, துடைப்பத்தை போட்டு வைக்கும் நிகழ்வுகள் இன்றுவரை பெரும்பாலான இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.. மெத்த படித்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..
கலசப்பாக்கம்: இப்போது விஷயம் என்னவென்றால், கலசப்பாக்கத்தில் பேய் இருக்கிறதாம்.. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில், பேய் இருப்பதாக சொல்லி, அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்குவதில்லையாம்.. இந்த குடியிருப்பை புறக்கணித்துவிட்டு வெளியேறிவரும் சம்பவங்கள் அதிர்ச்சியை தந்து வருகின்றன.. கலசபாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா, கடந்த 2012 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது..
அரசு அதிகாரிகள்: கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம், தாசில்தாரர்களுக்காகவே, புதியதாக அலுவலகம் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.
கடந்த 11 வருடங்களில் இப்போதுவரை 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.. ஆனால் அந்த குடியிருப்பில் எந்த ஒரு தாசில்தாரும் வசிக்கவில்லையாம். இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில், நடுராத்திரி ஏதோ உருவம் நடமாடுகிறதாம்.. பேய்கள் குறுக்குமறுக்குமாக நடப்பதாக வதந்தி பரவியிருக்கிறது.. இதையடுத்துதான், அந்த குடியிருப்பில் எந்த அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என்கிறார்கள்.
நள்ளிரவு: இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் சொல்லும்போது, இந்த கட்டிடம் கட்டி 11 வருடத்தில், ஒரு அதிகாரியும் தங்கியதில்லை.. ஒரே ஒரு தாசில்தார் மட்டும் பகலில் வருவார்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு கிளம்பிடுவார்.. வேற யாரும் வருவதில்லை. அதிகாரிகளுக்கு என்றைக்காவது அதிகமான வேலை காரணமாக, நள்ளிரவு ஆகிவிட்டால்கூட, இந்த பங்களா பக்கம் வருவது கிடையாதாம். எவ்வளவு நேரம் ஆனாலும், அவங்கவங்க வீட்டுக்கே போய்விடுகிறார்கள்.
அமாவாசை நாட்களில், அமானுஷ்ய உருவம் இருக்கிறதா சொல்றாங்க.. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சுடுகாடு இருக்கு.. அங்கிருந்து இந்த குடியிருப்புவரை, அமாவாசை நாட்களில் மட்டும் பேய்கள் வந்து போகின்றன" என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்களாம் அப்பகுதி மக்கள்.
சென்னை: தொழில்நுட்பங்கள், வண்ண வண்ண மால்கள், என மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்னை சென்று கொண்டிருக்கிறது.. எந்நேரமும் பரபரப்பும், பிஸியுமாய் காணப்படும் சென்னையில், மக்களை பயமுறுத்தும் இடங்களும் இருப்பதாக கூறிவருகின்றனர்.

உடைந்த பாலம், டிமான்டி காலனி, ப்ளூ கிராஸ் ரோடு: கரிக்காட்டுக்குப்பம், கிழக்கு கடற்கரைச் சாலை, அண்ணா மேம்பாலம் மற்றும் பெசன்ட் சாலை இப்படி எத்தனையோ இடங்களில் பேய் நடமாட்டம் உள்ளதாக சொல்கிறார்கள்.. மேற்கூறப்பட்ட இடங்கள் இன்றுவரை சென்னையில் மர்மமாகவே உள்ளன.. அதற்கேற்றார்போல், மக்கள் நடமாட்டமும் பெரிதாக காணப்படுவதில்லை..
அமானுஷ்யங்கள்: இறந்தவர்கள் ஆத்மாவாக, நடமாடுவதாக காலம் காலமாக சொல்லப்பட்டே வருகின்றன.. அப்படிப்பார்த்தால் உலகம் முழுக்க இறப்புகள், ஏதாவதொரு இடத்தில் நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.. என்றாலும், மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இறந்தவர்கள் பேயாக உலாவுவதாக சொல்லப்படுவதன் காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை..
பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சி பல்வேறு வருட காலமாகவே உலகளவில் நடந்து கொண்டேயிருக்கிறது என்றாலும், மேற்குறிப்பிட்ட இடங்களில் பெரும்பாலானவை இப்போதுவரை வெறிச்சோடியே கிடப்பதுதான், இப்படியான கட்டுக்கதைகளுக்கு அடித்தளமிட்டு கொண்டிருக்கிறது.. அதிலும், அரசு அதிகாரிகளே இப்படி நடுங்குவது வியப்பை தந்து வருகிறது. அத்துடன், கொள்ளைக்காரர்களுக்கும் பெருத்த வசதியாகி கொண்டிருக்கிறது..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications