அரண்ட திருவண்ணாமலை.. கலச கோபுரம் கண்ணை மறைக்குமாமே.. உடனே கிளம்பி வந்த பாஜகவினர்.. திடீர் பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை வழிபட முடியாத வகையில், வணிக வளாகம் கட்டும் பணிக்கு, பக்தர்களின் எதிர்ப்பு பெருகி வருவதாக தெரிகிறது. இது தொடர்பான போராட்டத்தையும் தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.
ஆன்மீக தலமான திருவண்ணாமலை கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.. அதுவும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கில் வந்து செல்வார்கள்.
இந்நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு பக்கத்திலேயே, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6.40 கோடி மதிப்பில் ஒரு அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்ட்டு, அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலை: ஆனால், இந்த கட்டிட பணிகளால், அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால், கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
அதாவது, இந்திய தொல்லியல் துறையின் விதிகள்படி, எந்த ஒரு பழமை வாய்ந்த கோயில்களுக்கு முன்பும் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற வரைமுறை இருக்கிறது.. ஒரு கோயிலுக்கு முக்கியமே கோபுரம் தான் என்பதால், அதனை மறைத்து தமிழக அரசு கட்டிடங்களை கட்டுகிறது..
விருந்தினர் இல்லம்: இந்து சமய அறநிலையத்துறை அலுவலகமே கோயிலுக்குள் இருக்கக்கூடாது என்று சட்டத்தில் உள்ளபோது, பழுது நீக்கும் மையம், விருந்தினர் இல்லம் இவை எல்லாம் எப்படி கோயிலுக்குள் அனுமதிக்க முடியும்? 100 சதவீத விதிமீறல்கள் இதில் உள்ளன" என்று போர்க்கொடி உயர்த்தப்பட்டு வருகிறது.
ஆனால், திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான வணிக கட்டிடத்தை கடைக்காரர்கள் சிலர் ஆக்கிரமித்து இருந்ததால், அவர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தியே, ஆக்கிரமிப்பை அகற்றி இருப்பதாகவும், அந்த கடைகளை இடித்து, கூடுதலான மாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால், வணிக வளாகம் கட்டுவதற்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யவில்லை, ஏற்கெனவே, கடைகள் இருந்த இடத்தில் தான் கட்டப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை: அதுமட்டுமல்ல, இப்போது கட்டப்பட்டு வரும் கடைகள், கோபுரத்தை விட உயரம் குறைவுதான்.. வேறு எந்தவித உள்நோக்கமும் இந்து சமய அறநிலை துறைக்கு கிடையாது.. இந்த பணிகளால் கோயிலின் தொன்மைக்கு எந்தவித பாதிப்பும் வராது என்றும் உறுதி தரப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த வணிக வளாகம் கட்டினால், கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனத்தை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று பக்தர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அத்துடன், வணிக வளாக கட்டிடத்தின் ப்ளூ பிரிண்ட் எனப்படும், மாதிரி கட்டட அமைப்பை, கோயில் நிர்வாகம் வெளியிடாமல் மூடி மறைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதை எதிர்த்து இந்து அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க தயாராகி வருகின்றன..
ராஜகோபுரம்: இன்றுகூட, அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் அருகே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.. மாவட்ட தலைவர் கேஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் அண்ணா சிலையை நோக்கி கட்சி கொடிகளுடன் வந்தனர்.
இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்றனர்.. இருந்தாலும், அனுமதியை மீறி செல்ல முயன்ற 160 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
கண்டனம்: போலீசாரின் இந்த செயலை கண்டித்து, மதிய உணவு சாப்பிடாமல் பாஜகவினர் உண்ணாவிரத போட்டத்திலும் ஈடுபட்டர்.. இறுதியாக, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேரில், தெற்கு மாவட்ட தலைவர் உட்பட 5 பேரை மட்டும் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
எனினும், கோபுரத்தை மறைக்காதபடி, தொடர்ந்து தரிசனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபக்கமும், இந்து அமைப்புகள் தேவையில்லாமல் தமிழக அரசை குறை சொல்கிறது என்று இன்னொரு தரப்பினரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருவதால் பரபரப்பு நீடித்து வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications