சொப்பனத்திலும் கண்டில்லா சாரே! ஈரான் போரால் அண்ணாமலையாருக்கே சிக்கல்! மனம் வெதும்பும் பக்த கோடிகள்!
திருவண்ணாமலை: இஸ்ரேல்-ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக இந்தியா முழுவதும் நிலவி வரும் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கம் கோயில்களிலும் தென்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காகவும், கோவில் பின்புறம் உள்ள 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் மேற்கொள்கின்றனர்.

உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் உலகம் முழுவதும் இருந்து பௌர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்களும், விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். மேலும் திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
அண்ணாமலையார் கோவில்
அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல், கோயிலில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாதங்களாக முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்ட பல்வேறு வகை உணவுப் பொருட்களும் இருந்தன. இவை பொதுவாக ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புளிசாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் போன்ற உணவுப் பொருட்கள் ரூ.10க்கு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இஸ்ரேல்-ஈரான் - அமெரிக்கா போர்
இவ்வாறு குறைந்த விலையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டதால், பல பக்தர்கள் இதனை விரும்பி வாங்கி வந்தனர். ஆனால் சமீப காலமாக இஸ்ரேல்-ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கோயில்களில் உணவு தயாரிப்பில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
இந்த தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் வணிக கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் லட்டு உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்களை தயாரிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் விளைவாக பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
லட்டு பிரசாதம் நிறுத்தம்
அதேபோல், பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முறுக்கு, மிளகு வடை, அதிரசம் மற்றும் லட்டு போன்ற பிரசாதங்களும் தயாரிக்க முடியாததால் அவற்றின் விற்பனையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது கோயிலில் புளிசாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் போன்ற சில உணவுப் பொருட்கள் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலவச லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டிருப்பதால், தரிசனம் செய்து வெளியே வரும் பல பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வணிக கேஸ் தட்டுப்பாடு
குறிப்பாக தொலைதூர மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் இந்த மாற்றத்தால் சற்று வருத்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் கோயில் இணை ஆணையர் பரணிதரண் கூறுகையில், பக்தர்களுக்கு தொடர்ந்து பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிக கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக கோயிலில் நிரந்தரமாக மின்சார அடுப்புகளை அமைத்து பிரசாதம் தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
விறகு அடுப்பு
கோயில் வளாகத்துக்குள் விறகு அடுப்புகளை பயன்படுத்த அனுமதி இல்லை என்பதாலும், மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வரை சில பிரசாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின்சார அடுப்புகள் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் மீண்டும் வழக்கம்போல் அனைத்து பிரசாதங்களும் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications