இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே!
திருவண்ணாமலை: சென்னையிலிருந்து மொத்தமாக 3 மணி நேரம் கொண்ட திருவண்ணாமலைக்கு விமான நிலையம் வேண்டும் என்று பேசியவர்தான் பாஜகவின் அஸ்வத்தாமன். இந்நிலையில், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.
திருவண்ணாமலைக்கு எப்படியும் ஏர்போர்ட் கொண்டு வந்தே தீருவேன் என்று, அஸ்வத்தாமன் தொடர்ந்து பேசி வந்தார். இப்படி இருக்கையில், தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

எடப்பாடியின் கேம்
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது கொஞ்சம் நஞ்சமல்ல. குறிப்பாக, "தவழ்ந்து காலில் விழுந்து பதவி பெற்ற" என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை சொல்லி பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசியிருந்தார். ஏற்கெனவே அண்ணாமலை மற்றும் அவரது டீம் மீது கடும் அதிருப்தியில் இருந்த எடப்பாடியை, இது பயங்கரமாக உசுப்பிவிட்டது. எனவே, இந்த முறை ஸ்கெட்ச் போட்டு அண்ணாமலையின் டீமில் இருந்த மொத்த பேரையும் எடப்பாடி வாஷ் அவுட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வலுவில்லாத வானதியின் குரல்
குறிப்பாக கோவையில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கொடுத்ததில்தான் எடப்பாடி சிறப்பாக கேம் விளையாடியிருக்கிறார். ஒரு தொகுதியை கொடுத்ததால், சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் மட்டுமே களமிறங்கியிருக்கிறார். வானதியும் அண்ணாமலைக்காக குரல் கொடுத்தார்.. ஆனால், தனது தொகுதியை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு அவருடைய குரல் இல்லை.
மொத்தமாக டீம் காலி
மறுபுறம் அண்ணாமலையில் டீம் உறுப்பினர்களான, கனகராஜ், வினோஜ் பி செல்வம் , எஸ்.ஜி சூரியா, அமர் பிரசாத் ரெட்டி, தரணி முருகேசன், அஸ்வத்தாமன் உள்ளிட்டோருக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது.
இதில் திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட் கொண்டுவருவேன் என சொன்ன, அஸ்வத்தாமனுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியிருக்கிறது.
புலம்பும் நிர்வாகிகள்
"அண்ணாமலைக்கு சீட் கிடைகாது என்பது எதிர்பார்த்துதான். ஆனா, அஸ்வத்தாமன் போன்றவர்களுக்கு சீட் கிடைக்காது எல்லாம் உச்சக்கட்ட ஏமாற்றம். நம்பிக்கை வைத்தவர்களை இப்படி ஏமாற்றியிருக்க கூடாது" என்று கட்சியினர் புலம்பியிருக்கின்றனர்.
மட்டுமல்லாது, இதற்கு முன்னர் ஏராளமான தோல்விகளை தழுவிய, தமிழிசை சௌந்தரராஜனுக்கும், ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகனுக்கும் எதுக்கு சீட் தரணும்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
அஸ்வத்தாமனின் உருட்டு
அஸ்வத்தாமனுக்கு சீட் கொடுத்திருந்தாலும் ஜெயித்திருக்க முடியாது என்று பலரும் கூறுகின்றனர். காரணம், அஸ்வத்தாமன் ஏர்போர்ட் கொண்டு வருவேன் என்று சொன்னதுதான். திருவண்ணாமலை விவசாய பூமி. வட மாவட்டங்களுக்கு தேவையான அரிசி இங்கிருந்தான் சப்ளை ஆகிறது. இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதுதான். அதுதான் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டுவிட்டு, விமான நிலையம் கொண்டுவருவதெல்லாம் ரொம்ப ஓவர்.
வொர்த் இல்லாத டிமாண்ட்
ஏற்கெனவே மத்திய அரசு உடான் திட்டத்தின் கீழ் ஏராளமான விமான நிலையங்களை கொண்டு வந்திருக்கிறது. 2014க்கு பிறகு கூடுதலாக 95 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதில் 15 விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கிறது. காரணம் போதிய பயணிகள் இல்லை என்பதுதான். அப்படியெனில் இதற்கு செய்யப்பட்ட செலவும் வேஸ்ட். திருவண்ணாமலைக்கு விமான நிலையம் கொண்டு வந்தாலும் இதுதான் நடக்கும் என மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில், இந்த கோரிக்கையை வைப்பவர்களுக்கு எப்படி ஓட்டு விழும்?
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications