போயிட்டியா திவ்யா.. திருவண்ணாமலை சாலையில் அழுதுகொண்டே வந்த கணவர்.. திடீர்னு பார்த்தால்? அட ஆண்டவா
திருவண்ணாமலை: திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் திவ்யா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததால் வரதட்சணை காரணமா என சந்தேகத்தின் பேரில் செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா விசாரணை நடத்தினார்.. மற்றொருபக்கம் விஷம் குடித்த கணவன் சீரியஸாகிவிட்டதால், தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. இது தொடர்பான விசாரணைகள் நடந்து வந்த நிலையில், திவ்யா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ளது விளாங்காடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் வேலு என்பவரின் 19 வயது மகள் திவ்யாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.. இவரது கணவர் பெயர் பிரதாப்.

புது மண தம்பதி
25 வயதாகும் பிரதாப், தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர்.. சென்னையில் தனியார் லாரி கம்பெனி மேனேஜராக வேலை பார்த்து வருவதால், சென்னையிலேயே தங்கியிருக்கிறார். 15 நாளைக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு திவ்யா, தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்த நிலையில, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்... இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, கணவர் பிரதாப்பும் விஷம் குடித்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.. திவ்யா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை..
வரதட்சணை கொடுமையா
திருமணமாகி சில மாதமே ஆகியிருப்பதால், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்திருப்பாரோ? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது.. ஆனால், கணவரும் ஏன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.. எனவே, இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தினர்.. இந்நிலையில், இநத சம்பவம் கூடுதல் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது..
தற்கொலை செய்து கொண்ட திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.. ஆனால், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. வயிற்று வலி காரணமாகவே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் சென்னையிலிருந்த பிரதாப்புக்கு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை விஷம்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதாப், உடனடியாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கிளம்பினார்.. ஆனால், உத்திரமேரூர் சாலையில் இரும்பேடு கிராமம் அருகே அழுது கொண்டே வந்துகொண்டிருந்தபோது, மனைவி இறந்த சோகத்தை தாங்க முடியாமல் விஷம் குடித்து கீழே விழுந்து மயங்கிவிட்டார்..
அங்கிருந்தவர்கள் பிரதாப்பை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. நேற்று முழுவதுமே தீவிர சிகிச்சை பிரதாப்புக்கு தரப்பட்ட நிலையில், இன்று பிரதாப் பரிதாபமாக உயிரிழந்தார்.. இது குறித்து கீழ் கொடுங்கலூர் போலீசார் மற்றும் வந்தவாசி வடக்கு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டதுமே, கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால், தழுதாழை கிராமமே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications