விட்டா நாங்களே இறங்கிடுவோம்.. திருவண்ணாமலையில் உறவினர்கள் திடீர் மறியல்.. அங்கே சிக்கலே இதுதான் போல

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவின், மீட்பு பணிகள் முறையாகவும், முழுமையாகவும் நடக்கவில்லை என்று கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது, அங்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. புதுச்சேரி, விழுப்புரத்தை போலவே, திருவண்ணாமலையிலும் பலத்த மழை கொட்டியது.

tiruvannamalai landslide

நேற்றுமுன்தினம், அண்ணாமலையார் கோவில் மலையிலிருந்து, ராட்சத பாறை ஒன்று அடிவாரத்திலுள்ள வஉசிநகர் பகுதியில் விழுந்தது. குடியிருப்புகளுக்கு மேலேயே ராட்சச பாறைகள் விழுந்ததால், வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துவிட்டன.

மீட்பு பணிகள்: இதில், 7 பேர் சிக்கி கொண்டதால், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.. ஆனால், தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்ததாலும், மண்ணை வெளியேற்ற முடியாததாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பிறகு, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு, நேற்று மாலை மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்களை மீட்டனர்.

ஆனால், மேலும், 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்பதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டது. எனவே, மீட்புப்பணிகள் நேற்றிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன..
ஆவேசம்: ஆனால், இதைக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொந்தளித்துவிட்டார்கள்.. காரணம், நேற்றிரவு மண்ணில் புதைந்த 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன.

tiruvannamalai landslide

இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், "இது பொய் செய்தி.. வெறும் 5 பேரை மட்டுமே மீட்டுள்ளனர்.. 7 பேர் என்று பொய் தகவலை பரப்புகிறார்கள்.. மீட்பு பணிகள் மிகவும் தாமதமாக நடக்கிறது.. முழுமையாக அனைவரையும் மீட்கவில்லை, எங்களை அனுமதித்தால் நாங்களே மீட்பு பணியில் இறங்குவோம்" என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

முழக்கம்: அத்துடன், இன்று காலையில், சாலை மறியலிலும் ஈடுபட துவங்கிவிட்டார்கள்.. இடிபாட்டில் சிக்கியுள்ள ராஜ்குமார், இனியா இவர்களின் உடலையும் உடனடியாக மீட்க வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி விட்டது. பொதுமக்கள் மறியலில் இறங்கியதுமே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே, இன்று காலை 7 மணி முதல், மீட்பு பணிகள் மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றன.. இடிபாடு பகுதிகளில் முழுவதுமே பாறைகள் உள்ள பகுதியாக இருக்கிறதாம்.. நேற்றுமுன்தினமும் இதே பாறைகளால்தான் மீட்பு பணிகள் தாமதமாகியிருக்கின்றன.. பேரிடர் மீட்பு படையினர் அவைகளை அப்புறப்படுத்திய பிறகே, 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாறைகள்: இப்போது மேலும் ஒரு பாறை அங்கு உள்ளதாக தெரிகிறது. இந்த பாறையை உடனடியாக அகற்ற முடியவில்லை. நவீன எந்திரங்கள் மூலம் பாறையை வெட்டி அப்புறப்படுத்தினால் மட்டுமே, புதைந்து போயுள்ள 2 உடல்களை மீட்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

tiruvannamalai landslide

வெறும் மண் நிறைந்த பகுதி என்றால் மீட்பு பணிகள் நேற்றே நிறைவு பெற்றிருக்கும். ஆனால், பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், இரவு 10 மணிக்கு மேல் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. எனவே, இன்று காலை 7 மணியிலிருந்து மறுபடியும் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுதான் சிக்கல்: அங்கிருக்கும் கட்டிடத்தின் வெளிப்பகுதியிலிருந்துதான் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டிருக்கின்றன.. அதனால், ராஜ்குமார், இனியாவின் உடல்களும் அந்த கட்டிடத்துக்குள்ளேயே இருக்கலாம் என்பதால்தான் நேற்று முழுவதும் தேடுதல் பணி நடந்தது. அப்போதும் 2 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. இந்த கட்டிடத்துக்கு பக்கத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஒருவேளை சிக்கியிருக்கலாம் என்பதால், இன்று அங்கு தேடும் பணி நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+