திருவண்ணாமலை.. 'அண்ணாமலை'யார் அருள் யாருக்கு கிடைக்கும்? தவமாய் தவமிருக்கும் 4 கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திமுகவில் மீண்டும் சீட் கிடைக்கப் பெற்ற சிட்டிங் எம்.பிக்களில் ஒருவரான சி.என்.அண்ணாதுரை திருவண்ணாமலையில் களம் காண்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலை போலவே சி.என். அண்ணாதுரை திமுகவுக்கு வெற்றி தேடித் தருவாரா? என்பது எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், திருப்பத்தூர், செங்கம் (தனி). திருவண்ணாமலை லோக்சபா தொகுதி உருவாக்கத்துக்குப் பின் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளது. முன்னர் திருப்பத்தூர் தொகுதியாக இருந்தது. அப்போது திமுகவின் வேணுகோபால் 4 முறை எம்பியாக வென்ற தொகுதி. திருவண்ணாமலை லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளையும் 2021 தேர்தலில் திமுகதான் கைப்பற்றியது.

Tiruvannamalai Lok Sabha Constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: 1521787; ஆண்கள்- 7,49,000; பெண்கள் - 7,72,669; 3-வது பாலினத்தவர்-118.

2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

வேணுகோபால்(திமுக) 4,73,866
காடுவெட்டி குரு (பாமக) 2,88,566
மணிகண்டன்(தேமுதிக) 56,960

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

வனரோஜா(அ.தி.மு.க) 5,00,751
அண்ணாதுரை(தி.மு.க)3,32,145
எதிரொலி மணியன்(பாமக) 1,57,954
சுப்ரமணியம்(காங்கிரஸ்) 17,854

Tiruvannamalai Lok Sabha Constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

அண்ணாதுரை (திமுக) 6,66,272
கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) 3,62,085
ஞானசேகர் (அமமுக) 38,639
ரமேஷ் பாபு (நாம் தமிழர் கட்சி) 27,503

2024-ம் ஆண்டு தேர்தலில் களம் காண்பவர்கள்

அண்ணாதுரை(திமுக)
கலியபெருமாள் (அதிமுக)
அஸ்வத்தாமன் (பாஜக)
ரமேஷ்பாபு (நாம் தமிழர் கட்சி)

திருவண்ணாமலை நிலவரம்: விவசாய பூமியாக இருப்பது திருவண்ணாமலை. டெல்டா பாசனப் பகுதிகளைப் போலவே காட்சி தரும் நிலப்பரப்பு. ஆனால் திருவண்ணாமலையில் விவசாயம் பொய்த்துப் போனதால் அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் பிழைப்பு தேடிச் செல்லும் பேரவலத்தில் உள்ளனர் இப்பகுதி மக்கள். ஆந்திராவின் செம்மரங்களை வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதியும் இதுதான். இத்தொகுதியில் திமுக, காங்கிரஸ் வலிமையான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது.
திருவண்ணாமலை தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம். பாமகவிடம் வன்னியர் வாக்குகள் அதிகம் இருக்கிறது. இந்த வாக்குகள் அப்படியே பாஜகவுக்குதான் விழுமா என்பது உறுதியானதாகவும் இல்லை. கடந்த தேர்தலில் பெற்ற சொற்ப வாக்குகளை விட சற்று கூடுதலாக நாம் தமிழர் ரமேஷ்பாபு பெறக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+