லோன் போட்டு கார் வாங்கிய திருவண்ணாமலை நபர்.. உடனே பக்கத்து வீட்டு பீரோவில் தங்க நகைக்கு வந்த சோதனை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த மகேந்திரனுக்கு 20 வயதுதான் ஆகிறது.. ஆனாலும் சொந்தமாக கார், வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, கடைசியில் இன்று கம்பி எண்ணும் நிலைமைக்கு வந்துள்ளார் மகேந்திரன்.. திருவண்ணாமலை மாவட்ட போலீசாரும் மகேந்திரனிடம் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் விழுப்புரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. பிரம்மதேசம் அடுத்த வடநெற்குணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீட்டில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர்கள் புகுந்து 13 தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள்.. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.உடனே மணிகண்டனும் பிரம்மதேசம் போலீசில் புகார் தரவும், போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி கேமராக்கள்

சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து ஆய்வு நடத்தினர். அப்போதுதான் மணிகண்டன் வீ்ட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது, அவரது சொந்தக்காரர் சிவகுமார் என்பது தெரியவந்தது.

26 வயதான சிவகுமார் ஒரு ஆசிரியர் ஆவார்.. ஆன்லைன் லாட்டரி மோகத்தால் சுமார் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்துவிட்டு, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, லாட்டரியில் இழந்தை பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக, கொள்ளை வரை ஈடுபட்டுள்ளது அம்பலமானது.

சீக்கிரமாக பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்பதற்காக லாட்டரியில் இறங்கி, பிறகு கொள்ளையடித்து, இன்று சிறைக்கே சென்றுவிட்டார் சிவகுமார்

திருவண்ணாமலை பீரோவில் தங்கம்

அதுபோலவேதான் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பேராசைக்கு ஆசைப்பட்டு, ஜெயிலுக்கு சென்றிருக்கிறார் மகேந்திரன்.தண்டராம்பட்டு அடுத்துள்ள பேராயம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்.. இவரது மனைவி கனிமொழி.. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார்கள்..

பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த அரை பவுன் நகை திருடுபோயிருந்ததை கண்டு அறிவழகன் குடும்பத்தினர் அதிர்ந்தனர்.

பக்கத்து வீட்டு இளைஞர்

இதனால் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள, சிசிடிவி கேமராவை பார்த்தனர்.. அப்போதுதான், பக்கத்து வீட்டை சேர்ந்த மகேந்திரன், வீட்டுக்கு வருவது பதிவாகியிருந்தது. வீட்டின் வெளியே மறைவாக வைத்திருந்த சாவியை எடுத்து, கதவை திறந்து, உள்ளே சென்று பிறகு சிறிது நேரம் கழித்த வீட்டின் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு செல்வதை கண்டு அறிவழகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இது குறித்து கனிமொழி, வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனிடம் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், மகேந்திரன் போலீசாரிடம் உண்மையை ஒப்புக் கொண்டார்.

தவணை பணம்

அதாவது, 20 வயது சொந்தமாக கார் வைத்திருக்கிறாராம்.. இந்த காரை மாத தவணைக்கு வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.. ஆனால், கார் வாங்கியதற்கான கடனுக்கு மாத தவணை செலுத்த பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்..

காருக்கு பணம் கட்ட வேண்டும் என்பதற்காகவே அறிவழகன் வீடு புகுந்து நகையை திருடி சென்று விற்று, தவணை தொகை செலுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரனை கைது செய்து போலீசார் நேற்று ஜெயிலில் அடைத்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+