திருவண்ணாமலையில் திடீர்னு தண்ணீரில் தோன்றிய பொருள்.. அரிய அருகல் சிற்பத்தை கண்டு மலைத்த மக்கள்.. செம
திருவண்ணாமலை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.. அதேபோல குளங்களை சீரமைக்கும் பணிகளும் ஆங்காங்கே நடக்கின்றன.. இதுபோன்ற பணிகளின்போது, மண்ணிலிருந்து திடீரென சிலைகள், சிற்பங்கள் வெளிவருகின்றன.. இதை பார்த்த அந்தந்த பகுதி மக்கள் பரவசமாகும் நிகழ்வுகளும் நடக்கின்றன.. அதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இப்படியான சிலிர்ப்பு சம்பவம் ஒன்று நடந்து, அம்மக்களை திகைப்பில் ஆழ்த்தி வருகிறது..
சமீபத்தில், வேலூர் மாவட்டத்தில் சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.. அன்பூண்டி என்ற ஊராட்சியில் ஆயிரம் வருடங்கள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் கட்டிடம் பழுதடைந்து பராமரிப்பின்றி இருந்தது.

இதன்காரணமாக கோயிலை புதுப்பித்து மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட மக்கள் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற நந்தகுமார், இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்..
வேலூர் மண்ணில் சிலை
அப்போது, கோயிலை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.. அத்துடன் இக்கோயிலின் திருப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் 2 மாதங்களுக்கு முன்பு துவக்க வைத்திருந்தார். பின்னர், திருப்பணிகள் அந்த கோயிலில் நடந்து வருகிறது.
சம்பவத்தன்று ஜேசிபி மூலம் மண்ணை அள்ளும்போது, பூமிக்குள் விநோத சத்தம் வந்துள்ளது.. இந்த சத்தம் கேட்டு ஊழியர்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.. பிறகு சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சத்தம் வந்த இடத்தில் மீண்டும் தோண்டப்பட்டது.. அங்கிருந்த மண்ணை அள்ளும்போது 4 சாமி சிலைகள் மண்ணில் கிடந்ததை கண்டு ஆச்சரியமானார்கள்..
சிலைகளுக்கு திடீர் அபிஷேகம்
விநாயகர் சிலை, அம்மன் சிலை, நடராஜர் சிலை, விஷ்ணு சிலை என்று அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்பட்ட அந்த சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன.. அம்மன் சிலை 2 அடி உயரமும், மற்ற சிலைகள் ஒன்றரை அடி உயரமும் இருந்துள்ளன.. இந்த சிலையை மொத்தமாக ஒரே இடத்தில் பார்த்ததுமே, அக்கிராம ஊர் மக்கள் அங்கேயே சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்...
1000 வருட பழமை
இந்த சிலைகள் பஞ்சலோக சிலைகளா அல்லது செப்பு சிலைகளா என்பது தெரியவில்லை என்பதால், ஆய்வு செய்த பிறகுதான் தெரிய வரும் என்கிறார்கள்.. ஆனால், திருத்தாளீஸ்வரர் கோயிலுக்கு உடமையான சிலைகளாக இருக்கலாம் என்றும், அந்நியர் படையெடுப்பின்போது ஊர் பெரியவர்களே, மண்ணில் இச்சிலைகளை புதைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
வேலூரில் ஆயிரம் ஆண்டு வருட பழமையான திருத்தாளீஸ்வரர் கோயிலில், அழகிய வேலைப்பாடுகளுடன் 4 கடவுள் சிலைகள் கிடைத்திருப்பது அம்மாவட்ட மக்களை வியப்பில் ஆழ்த்தியது நினைவிருக்கலாம்.
திருவண்ணாமலையில் தோன்றிய சிற்பம்
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், சமண சமயத்தின் அருகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அம்மாவட்ட மக்களை திக்குமுக்காட வைத்துகிறது..
திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் ஒன்றியம், அனக்காவூர் ஏரியில்தான் இந்த சிற்பம் கிடைத்துள்ளது.. தண்ணீரில் மூழ்கிய நிலையில் அருகர் சிற்பம் இருந்துள்ளது.. இதற்கு பிறகுதான், அகிம்சை நடை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதரன் அப்பாண்டைராஜ் இந்த சிற்பத்தை அடையாளப்படுத்தினார்..
அருகர் சிற்பம் - பரவசத்தில் மக்கள்
அருகர் சிற்பம் குறித்து அவர் சொல்லும்போது, "அனக்காவூர் கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக இது திகழ்ந்து வருகிறது.. 5 வருடங்களுக்கு முன்பு இந்த ஏரியை தூர் வாரினார்கள்.. அப்போது, பீடத்துடன் கூடிய அருகர் சிற்பம் கிடைத்தது..
அந்த சிற்பத்தை அப்போது கரையில் கொண்டு வந்து வைத்திருந்தனர்.. ஆனால், திடீரென மண் கரைந்ததால், அந்த சிற்பம் மறுபடியும் ஏரிக்குள்ளேயே நழுவி விழுந்துவிட்டது.. இப்பேது தண்ணீர் கொஞ்சம் வற்றியுள்ளதால், சிற்பம் வெளியில் தெரிகிறது... நீரிலேயே இருந்ததால், சிற்பத்தின் மீது பாசி படிந்துள்ளது..
ஆச்சரியத்தில் திருவண்ணாமலை
அருகர் என்பவர், தமிழ் சமண சமயத்தின் முதன்மையானவர் ஆவார்.. பிறகு ஜெயின் சமயத்துடன் இணைக்கப்பட்டு, தீர்த்தங்கரராக பாவிக்கப்படுகிறார்.
இந்த அருகர் சிற்பத்தை கிராம மக்கள், எல்லைச்சாமி, நொண்டிச்சாமி, வெள்ளாயச்சாமி என்ற பெயர்களில் அழைத்து வந்தனர்.. இப்போது இந்த சிற்பத்தை ஆராயும்போது, அது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கலை பாணியில் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது" என்றார். திருவண்ணாமலையில் கிடைத்த இந்த அரிய சிற்பமானது, இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications