வாயடைத்து போன வந்தவாசி.. திருவண்ணாமலை திவ்யா யோசிக்காமல் எடுத்த முடிவு.. இதுக்கு ஒரு முடிவு இல்லையா
திருவண்ணாமலை: காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும், தொழில்நுட்பம் எவ்வளவுதான் பெருகினாலும், கல்வி எவ்வளவுதான் அதிகரித்தாலும், வரதட்சணை கொடுமை மட்டும் நம்முடைய நாட்டில் இன்னமும் அப்படியே உள்ளது.. வரதட்சணை கொடுமைகளின் வடிவங்கள்தான் மாறுகிறதே, தவிர, வரதட்சணை கொடுமையால் உயிரை விடும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இதோ இந்த திருவண்ணாமலை பெண்ணுக்கு என்ன நடந்தது?
கேரளாவை சேர்ந்த துஷாரா என்ற பெண்ணுக்கு கடந்த 2013-ல் திருமணம் நடந்தது.. 25 பவுன் நகைகளும், ரூ.5 லட்சம் பணமும் வரதட்சணையாக தரப்பட்டுள்ளது.. கூடுதல் வரதட்சணை கேட்டு, துஷாராவை கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

உலுக்கியெடுத்த துஷாரா கேஸ்
2018ல், துஷாரா இறந்துவிட்டார்.. இவர் எப்படி இறந்தார் என்று உடனடியாக யாருக்குமே தெரியவில்லை. துஷாராவின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது, 20 கிலோ மட்டுமே உடல் எடை இருந்துள்ளது.. பட்டினி போட்டே துஷாராவை கொன்றிருப்பதை அறிந்து ஒட்டுமொத்த கேரளாவும் அதிர்ச்சி அடைந்தது.
இதோ திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு பெண் இறந்துள்ளார்.. வந்தவாசியை அடுத்துள்ளது விளாங்காடு.. இந்த கிராமத்தில் வசித்து வரும் வேலு என்பவரின் 19 வயது மகள் திவ்யாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
கணவர் பெயர் பிரதாப்.. 25 வயதாகிறது.. தழுதாழை கிராமத்தை சேர்ந்த பிரதாப், சென்னையில் தனியார் லாரி கம்பெனி மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.. சென்னையில் வேலை என்பதால், அங்கேயே தங்கியிருக்கும் சூழல் உள்ளது,
அம்மாவுக்கு வந்த சந்தேகம்
எனவே, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வாராம்.. அப்படித்தான் இந்த முறையும் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, சென்னைக்கு சென்றிருக்கிறார்.. எனவே, கடந்த 10 நாட்களாக திவ்யா விளங்காடு கிராமத்திலுள்ள தன்னுடைய அம்மா விட்டில் தங்கியிருந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாதபோது, திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...
பிறகு, வீட்டிற்கு திரும்பி வந்த திவ்யாவின் அம்மா, ரூமிலிருந்து மகள் நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகம் அடைந்தார்.. எனவே, ரூம் கதவை தட்டியிருக்கிறார்.. கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது திவ்யா சடலமாக தொங்கியதை கண்டு கதறி துடித்தார்.. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கதவை உடைத்து, சடலத்தை மீட்டனர்.
கீழ்கொடுங்காலூர் போலீஸுக்கும் தகவல் தந்ததையடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர்.. திவ்யா உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வந்தவாசி அரசு மருத்துவமனை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, அங்கு கொண்டு செல்லப்பட்டது
பிரதாப் ஏன் தற்கொலை
இதனிடையே, மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவலை சென்னையிலுள்ள பிரதாப்புக்கு சொல்லியிருக்கிறார்கள்.. இதைக்கேள்விப்பட்டதுமே, பிரதாப் விஷம் குடித்து விட்டார்.. ஆனால், அங்குள்ளவர்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால் ஆபத்தான நிலையில் பிரதாப் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
திவ்யா தற்கொலைக்கு காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை.. திருமணமாகி சில மாதமே ஆவதால், வரதட்ணை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.. ஆனால், பிரதாப் ஏன் விஷம் குடித்தார் என்று தெரியவில்லை.. இது தொடர்பான ஆர்டிஓ விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications