Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தம்பி வா.. இயக்கத்தை வழிநடத்து..’ உரிமையோடு அழைத்த ஆ.ராசா.. உணர்ச்சிவசப்பட்ட உதயநிதி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ. ராசா உதயநிதியின் செயல்பாடுகளை பாராட்டி உரிமையுடன் தம்பி வா இந்த இயக்கத்தை வழிநடத்து என்றார் நெகிழ்ச்சியாக. அப்போது உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன் தான் செம ஹைலைட்.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, "29 மாவட்டங்களில் இருந்து இவ்வளவு பெரிய கூட்டத்தை கட்டுக்கோப்பாக திரட்டியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய சல்யூட். மற்ற கட்சிகள் ஆய்வு செய்யுமளவுக்கு இவர் செய்துள்ள இந்த சம்பவம் சரித்திரத்தில் இடம்பெறும். பெரியாருக்கு ஒரு முறை மன சலிப்பு ஏற்பட்டது.

udhayanidhi-stalin-got-emotional-while-a-raja-speech-in-dmk-youth-wing-meet

பெரியார் - அண்ணா

ஏன் வாழ்கின்றோம் என்று விரக்தி ஏற்பட்டதாக விடுதலை நாளிதழில் எழுதினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா அமெரிக்காவில் இருந்தார். அவர் பதறிப்போய், உங்களுக்கு ஏன் தலைவரே மன சலிப்பு என்று கேட்டார். எனக்க தெரிந்து உலகில் எத்தனையோ புரட்சிகளை பார்த்திருக்கிறேன். ரஷ்யாவில் மார்க்ஸ், லெனின் போல ஒரு தத்துவத்தை ஒருவர் சொல்லி, அதை இன்னொருவர் தான் நிறைவேற்றுவார்.

ஆனால் சொன்ன தத்துவத்தை நிறைவேற்றியவர் நீங்கள் மட்டும் தான். உங்களுக்கு ஏன் சலிப்பு என பெரியாரிடம் அண்ணா கேட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்த நாட்டில் யார் முதல்வராக இருந்தாலும் அண்ணாதுரை தான் ஆள்கிறார் என்று அண்ணா சொன்னார். அதை இந்த மேடையில் எண்ணி பார்க்கிறேன்.

தத்துவங்களை தாங்கி

கலைஞர் ஆட்சி பொறுப்பிற்கு வந்தார். நாங்கள் நாடாளுமன்றத்தின் 20 வருடங்கள் இருக்கிறோம். தமிழுக்கு செம்மொழி மட்டுமல்ல, பெண்ணுக்கு சொத்துரிமை என்று ஆட்சியில் பல திட்டங்களை கொண்டார். 56 இன்ச் மோடி நாடாளுமன்றத்தில், சுதந்திரமடைந்து இத்தனை நாட்கள் நேரு செய்யவில்லை, இந்திரா காந்தி செய்யவில்லை நான் தான் 40,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு சென்றேன் என்றார்.

அதற்கு நான் சொன்னேன் மோடி அவர்களே நீங்கள் இதை 2024 ஆம் ஆண்டு சொல்கிறீர்கள். 1971 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு சேர்த்தவர் எங்கள் தலைவர் கலைஞர். என்று கூறினேன். இந்த தத்துவங்களை எல்லாம் தாங்கி நிற்கும் தலைவர் இங்கு இருக்கிறார். பெரியார் தனி நாடு, திராவிட நாடு கேட்டார்.

இப்படி ஒரு அமைச்சரை

அண்ணா மாநில சுயாட்சி கேட்டார். தீர்மானம் போட்டவர் கலைஞர். நீட் தொடங்கி, விஷ்வகர்மா வரை உங்கள் சட்டங்களை ஏற்க மாட்டோம், நாங்கள் எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று இந்தியாவில் சொல்லும் தலைவர் இவரை தவிர வேறு யார். இன்றைக்கு அவருடைய மகன் இந்த இயக்கத்தையும், தமிழ்நாட்டையும் வழிநடத்த இருக்கிறார்.

கலைஞரின் பேரன் என்பதாலோ, ஸ்டாலினின் மகன் என்பதாலோ மட்டும் அந்த தகுதி வரவில்லை. விளையாட்டு துறை வைத்து இவ்வளவு சாதனை செய்த ஒரு அமைச்சரை நான் இந்தியாவிலேயே பார்த்ததில்லை. நெடுஞ்சாலை, உள்ளாட்சி, கூட்டுறவு எல்லாம் தெரிந்த துறைகள். விளையாட்டை வைத்து இவ்வளவு விந்தைகளை செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட அமைச்சரை தம்பி உங்களை தான் பார்க்கிறேன்.

தம்பி வா

கலைஞர், ஸ்டாலின் ரத்தத்திற்கு மட்டுமல்ல உதயநிதி அவர்களின் லட்சியங்களுக்கும் வாரிசு. சனாதனத்திற்கு மண்டியிட மாட்டேன் என்றார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, 20 உயர் நீதிமன்றங்களில் வழக்கு. அப்போதும் பயப்படவில்லை. என்ன செய்ய போகிறோம் என்று திகைக்கவில்லை. மண்டியிடாமல் கொள்கையோடு இருப்பேன் என்றார். அதற்காக உன்னை ஏற்கிறேன். இந்த வித்தையை உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தது.

அறிவின் மீது தாகம், லட்சியத்தின் மீது மோகம். அறிவுக்கு திருவிழா நடத்திய ஒரே தலைவன் நீ மட்டும் தான். நான் உரிமையோடு ஒருமையில் அழைக்கிறேன். தம்பி வா. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை நடத்து. வாழ்க். வெல்க." என்றார். ராசாவின் பேச்சை உற்று நோக்கிய உதயநிதி புன்சிரிப்புடன் மனம் நெகிழ்ந்து ராசாவுக்கு நன்றி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+