திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்தரங்கம்".. சார், வாயை தொறந்தாலே ஆபாசம்.. நைட் வீடியோ கால்.. கிளாஸ்ரூமுக்குள்ளேயே நுழைந்த "ஜனம்"

வீடியோகால் மூலம் ஆபாச தொல்லைகள் தந்த வந்தவாசி ஆசிரியர் கைதாகி உள்ளார்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: ஆசிரியரின் பாலியல் தொல்லைகளை கேள்விப்பட்டு, நேரடியாக கிளாஸ்ரூமுக்குள்ளேயே ஆவேசமாக புகுந்துவிட்டார்கள்.. அங்கேயே அந்த அறிவியில் ஆசிரியரை வெளுத்தெடுத்துள்ளனர்.

பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..

ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறில்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

மார்கழி பவுர்ணமி..வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் என்ன நன்மைகள்.. நல்ல நேரம் எப்போது? மார்கழி பவுர்ணமி..வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் என்ன நன்மைகள்.. நல்ல நேரம் எப்போது?

பிராக்டிக்கல்

பிராக்டிக்கல்

தினமும் ஏதாவது ஒரு ஆசிரியர், பாலியல் புகாரில் கைதாவதும் தொடர்கதையாகி வருகிறது... இன்னொரு ஆசிரியரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிக்கி உள்ளார்.. வந்தவாசி அருகே உள்ள சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள்.. இங்கு, அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பரணி.. 57 வயசாகிறது.. இவர் அறிவியல் பாடம் எடுப்பதால், பிராக்டிக்கல் அதாவது செய்முறை தேர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க 'வேண்டிய தேவை உள்ளது. எனவே, இதற்காகவே ஒரு வாட்ஸ் ஆப் க்ரூப் ஒன்றினை அமைத்துள்ளார்.

 வாட்ஸ்அப் குரூப்

வாட்ஸ்அப் குரூப்

இந்த வாட்ஸ்அப் க்ரூப்பில், 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே உள்ளனர்... அதில் உள்ள மாணவியர் சிலருக்கு, பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். திடீரென வீடியோ கால் செய்வாராம்.. அதுவும் நைட் நேரத்தில் மட்டுமே வீடியோ கால் செய்வாராம்.. இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி மாணவிகளை அச்சுறுத்தியுள்ளார். வாட்ஸ்அப் காலில் மாணவிகளிடம் மிக ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், அந்த மாணவிகள், தங்கள் பெற்றோர்களிடம் இதை பற்றி கண்ணீருடன் கூறியுள்ளனர்..

 கிளாஸ்ரூமுக்குள்

கிளாஸ்ரூமுக்குள்

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்களுடன், அந்த பள்ளிக்கே கிளம்பி சென்றுவிட்டனர். விஷயத்தை கேள்விப்பட்டு அந்த பகுதி மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.. ஒட்டுமொத்தபேரும், பரணி இருந்து அந்த கிளாஸ்ரூமுக்குள் நுழைந்து, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்... அதற்குள் பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்து, பரணியை விடுவித்தனர்.. இதையடுத்து, பரணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள், அரசு பள்ளி முன் முற்றுகையிட்டு போராட்டத்திலும் குதித்தனர்.. அதற்குள் தகவலறிந்த, கீழ்கொடுங்காலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பெற்றோரிடம் பேச்சு நடத்தினர்.. ஆசிரியர் பரணியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தும் வருகிறார்கள்..

 நயினார் கோயில்

நயினார் கோயில்

4 நாளைக்கு முன்புதான், ஒரு தலைமை ஆசிரியர் கைதானார். ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் அருகே சிறுவயல் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்.. ஜூலியஸ் ரவிச்சந்திரன் என்பது அவர் பெயர்.. 56 வயதாகிறது.. திருநெல்வேலியை சேர்ந்தவராம்.. ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை மட்டுமே டார்கெட் செய்து, பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார்.. இவருக்கு ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்பவரும் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.. கடைசியில், தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன், ஜெயபால் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி, ஒட்டுமொத்த கிராம மக்களும், ஒன்றுதிரண்டு, நேரடியாக கலெக்டரிமே சென்றுவிட்டார்கள்..

 ஈஸி ஜாமீன்

ஈஸி ஜாமீன்

அதற்கு பிறகுதான் குற்றச்சாட்டு நிரூபணமாகி அந்த தலைமை ஆசிரியரை போக்சோவில் கைது செய்தார்கள்.. இதில் என்ன ஒரு கொடுமை என்றால், இந்த தலைமை ஆசிரியர், ஏற்கனவே, இதே குற்றச்சாட்டுக்காக கடந்த 2018ல் திருநெல்வேலியில், போக்சோவில் கைதானவராம்.. ஜாமீனில் வந்து மறுபடியும், வேலையை காட்டி உள்ளார்.. போக்சோ சட்டத்தில் கைதாகி, எளிதாக ஜாமீனையும் பெற்று விடுவதால், போக்சோவை இன்னும் கடுமையாக்க வேண்டி உள்ளது.. இவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், பெண் குழந்தைகளை சீண்டும் இதுபோன்றவர்களை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டி அவசியம் இங்கு ஏற்பட்டுள்ளது.

English summary
Vandavasi crime and sexual harassment case student parents protest near Thiruvannamalai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X