Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்.. டிச.3ல் நடைபெறும்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைப்பெறுகிறது. கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயரைத் திருத்துவது, முகவரி மாற்றுவது போன்ற பணிகளை இன்று மேற்கொள்ளலாம். திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயர் சேர்ப்பதற்கும் செல்லும் போது மறக்காம ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், புதிதாக பெயர் சேர்ப்பதெனில் வயதுக்கான சான்றிதழ் போன்றவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

Voter list special camp in Tamil Nadu 2 days Dec 3rd and 4th in Tiruvannamalai

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திருத்தங்கள் அதாவது பெயர் மாற்றம் முகவரி மாற்றம் மற்ற பல திருத்தங்கள் இருப்பின் அதனை சிறப்பு முகாம்கள் மூலம் சரி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த புதிய அட்டவணைபடி .வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. சீரான இடைவெளியில்இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். கடந்த முறை நடைப்பெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 15,187 பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர் பட்யில் சிறப்பு முகாம் நடைபெறாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+