திருவண்ணாமலையில் இரக்கமே இல்லாத கார் டிரைவர்.. பிளஸ் 1 மாணவன், நண்பன் இன்று உயிருடன் இல்லை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரும் அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் விக்னேஸ். இவர்கள் மட்டப்பிறையூர் கிராமத்திற்குச் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மொடையூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது யாருமே எதிர்பார்க்காத சம்பவம் ஒரு காரால் நடந்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில், மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சரியாக செயல்படாவிட்டால் நிறைய இழப்புகளையும், வாழ்க்கையே இல்லாமல் போகும் நிலையும் வரும் அபாயம் உள்ளது. நன்றாகத்தான் செல்வார்கள்.. எதிரே எமன் போல் வரும் சிலரால் அவர்கள் உயிரே போய்விடும்.

விபத்து என்பது தற்செயலாக நிகழ்வது என்றாலும், போககுவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காமல் வரும் வாகனங்களால், ஓட்டுநரின் அஜாக்கிரதையால், சாலையில் பயணிக்க வேண்டிய வேகத்திற்கு மேல் 120, 140 என்று வந்து கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் போன்றவற்றால் தான்விபத்து ஏற்படுகிறது. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென ஊடே செல்லும் போது, அவர்களை காப்பாற்ற நினைத்து உயிரைவிட்ட டிரைவர்கள் பலர் இருக்கிறார்கள். அண்மையில் கூட ஆந்திரவிபத்திற்கு இருசக்கர வாகன ஓட்டியின் அஜாக்கிரதை தான் காரணம். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் விஜய் என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் விக்னேசும் (16) மட்டப்பிறையூர் கிராமத்திற்குச் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் மொடையூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
போளூர்- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். மொடையூர் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஜய், விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போளூர் போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்த விஜய்யின் தந்தை பிச்சாண்டி, விக்னேஷின் தந்தை பார்த்திபன் ஆகியோர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் டிரைவரையும் தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி பிளஸ்-1 மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் போளூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications