நரிக்குறவர் பெண் ஒரே மிதி.. நெற்றியில் விபூதி பூசிவிட்ட "போலி" ஆடிபோயிட்டாரு.. திருவண்ணாமலையில் பரபர
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு, பக்தர்களும், பொதுமக்களும் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.. நேற்றைய தினம் நடந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பை தந்து வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கமாகும். கடவுள் மீதான பக்தர்களின் அதீத நம்பிக்கை மற்றும் இரக்க குணம் காரணமாக கிரிவல பக்தர்களிடம் மோசடி கும்பலின் கைவரிசை தொடர்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது.

இறைவன்: இறைவனை தேடி வந்த சாதுக்கள், யாரிடமும் யாசகம் கேட்பது கிடையாது.. இவர்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது.. ஆனால், இவர்களது செயல்களை பின்பற்றி நடப்பதாக சொல்லி, நூற்றுக்கணக்கானோர் சாமியார் வேடம் தரித்து கிரிவலம் பாதையில் வலம் வருகிறார்கள்.. இந்த கிரிவல பாதையிலேயே தங்கி யாசகம் பெற்றும் வாழ்கின்றனர்... இவர்களின் தோற்றத்தை பார்த்ததுமே, உணவு மற்றும் காவி உடையை பக்தர்களே பிரியப்பட்டு வழங்கிவிடுகிறார்கள்.
உண்மையான சாதுக்கள் என்று நினைத்து, பணத்தையும் தந்து உதவுகிறார்கள்.. பக்தர்களின் இந்த மென்மையான குணத்தை, சிலர் தவறாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல், பக்தர்களிடம் இப்படியே வசூலில் இறங்கிவிடுகிறார்கள்..
கூட்ட நெரிசல்: சிலசமயம் கட்டாய வசூலிலும் மோசடியிலும் ஈடுபடுகிறார்களாம்.. பவுர்ணமி தினத்தில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால், கோயில் கட்டுவதாக கூறி நன்கொடை வசூலிப்பது, மாட்டுக்கு கூடுதல் கால் என காண்பித்து பணம் வசூலிக்கின்றனர்.
இதற்காகவே சிலர், வெளியூர்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள், வயதானவர்களை கூலிக்கு அழைத்து வந்து, யாசகம் பெறும் பணியில் ஈடுபடுத்துகிறார்களாம். பெண்கள் நெற்றியில் விபூதி பூசும் கும்பல், அத்துமீறி காணப்படுகிறதாம்.
எலுமிச்சம்பழம்: இவர்களாகவே வலியவந்து, எதிரே வரும் பக்தர்களின் நெற்றியில் விபூதி பூசிவிடுவது, எலுமிச்சம் பழத்தை எடுத்து தலையில் தேய்த்து, ஆசீர்வதிப்பதாக சொல்வது, பிறகு பணம் கேட்டு பின் தொடர்வது வாடிக்கையாகி விடுவதாக சொல்கிறார்கள். இதனால் பெண் பக்தர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருவதாக தொடர்ந்து அதிருப்திகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இதில் சில கஞ்சா ஆசாமிகளும் அடக்கமாம்.. விபூதியை பக்தர்களுக்கு பூசி விட்டு பணம் பறிக்கும் நோக்கில் கஞ்சா போதையில் போலி சாமியார் ஈடுபட்டுள்ளார்களாம்.. இப்படித்தான் நேற்றைய தினமும், விபூதியை பூசிவிட்டு, ஒரு போலி சாமியார் பணம் கேட்டுள்ளார்..
நடைபாதை: பிறகு, கையில் பெரிய கற்களை தூக்கிக்கொண்டு இளைஞர்களையும், அங்கு நடைபாதையில் கடை வைத்திருக்கும் நரிக்குறவர் சமூக பெண்ணையும் அந்த போலி சாமியார் தாக்கவும் முயற்சி செய்தார். ஆனால், அந்த நரிக்குறவ பெண்ணோ, போலி சாமியாரை தாக்கி சட்டையை பிடித்து இழுத்து, அடித்து நொறுக்கிவிட்டார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும்.
பக்தர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் போலி சாமியார்கள் மீது மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த போலி சாமியார் கஞ்சா போதையில் நடைபாதையில் கடை வைத்திருக்கும் நரிக்குறவர் இன பெண்ணையும் தாக்க முயற்சி செய்துள்ளார். அதை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள், போலி சாமியாரை சரமாரியாக அடித்து தாக்கினார்கள்..
சரமாரி தாக்குதல்: அப்போது, நரிக்குறவர் இன பெண்ணும் போலி சாமியாரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.. அவரது சட்டையை பிடித்து இழுத்து வந்து, செருப்பால் அடித்துள்ளார்..
இந்த ஆசாமியை போலவே இன்னும் 500 க்கும் மேற்பட்ட போலி சாமியார்கள் வலம் வருகிறார்களாம்.. இவர்கள் கிரிவலப் பாதையில் படுத்து தூங்கியும், பக்தர்களிடம் காணிக்கை கேட்பதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.. கஞ்சா போதையில் தொடர்ந்து பக்தர்களிடம் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதால், இந்த போலி சாமியார்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications