7 விவசாயிகளை குண்டாஸில் கைது செய்தது ஏன்? எதிர்ப்புக்கு நடுவே திருவண்ணாமலை காவல் துறை பரபர விளக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் 7 பேரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடங்கியது. இதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் மேல்மா சிப்காட் விரிவாக்க பணிகள் தொடர்ந்து வந்தது. தற்போது 20 அலகுகள் வரையிலான பணிகள் முடிந்துள்ளது. இதற்கிடையே 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும் மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி பணி ஒருபுறம் நடந்தாலும் கூட விவசாயிகளின் போராட்டம் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதாவது சிப்காட் பணியை கைவிடக்கோரி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. போராட்டக்கார்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் போராட்டடத்தை முன்னெடுத்து வந்த விவசாயிகள் 20 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதனால் அவர்கள் 7 பேரையும் ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாளை திருவண்ணாமலையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன்? என்பது பற்றி காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தை முன்னின்றி நடத்தியவர்கள். அதோடு அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் கடந்த 8 மாதங்களுக்கு செய்யாறியல் தங்கி மக்களை தூண்டிவிட்டார். கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications