அந்தரத்தில் தொங்கிய உடல்.. பிரசாந்த் எடுத்த கொடூர முடிவு.. உயிர் ஊசலாடும் 17 வயது சிறுமி!
கரண்ட் கம்பத்தில் ஏறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
திருவண்ணாமலை: காதலியின் உடம்பெல்லாம் இரும்பு கம்பியால் குத்திவிட்டு, ஓடிப்போய் கரண்ட் கம்பத்தில் ஏறி கரண்ட் கம்பியையும் பிடித்துவிட்டார் இளைஞர் பிரசாந்த்.. இதில் உடல் கருகி அங்கேயே உயிரிழந்த பிரசாந்த், கரண்ட் கம்பியில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார்..
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.. இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.. அந்த சிறுமிக்கு வயது 17 வயதுதான்.. ஒருதலைக்காதல் இது.. தன்னுடைய லவ்வை அந்த பெண்ணிடம் பலமுறை சொல்லி உள்ளார் பிரசாந்த்.. ஆனால் சிறுமி மறுத்துள்ளதாக தெரிகிறது.

விடாமல் கட்டாயப்படுத்தியும் வந்த நிலையில், சம்பவத்தன்றும் இது பற்றின தகராறு வெடித்துள்ளது.. அப்போதும் அப்பெண் காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில், இரும்பு கம்பியை எடுத்து அவரை தாக்கி விட்டார்.. கை, தலை என கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்ணை சரமாரி தாக்கி குத்தினார்.
பிறகு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார்.. அதே வேகத்தில் கரண்ட் கம்பம் ஒன்றின் மீது ஏறினார்.. பிறகு ஓடிக் கொண்டிருந்த மின் கம்பியையும் இறுக்கமாக பிடித்துவிட்டார்.. இதில் அந்த செகண்டே உயிர் பிரிந்துவிட்டது.. பிரசாந்தின் உடல் கரண்ட் கம்பியில் அந்தரத்தில் தொங்க ஆரம்பித்தது.. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
அவர்கள் விரைந்து வந்து பிரசாந்த் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல, இரும்பு கம்பியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அவரது உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.
கீழ்பென்னாத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரித்தும் வருகிறார்கள்.. பிரசாந்த் கரண்ட் கம்பியில் தொங்கி கொண்டிருந்த சம்பவமும், பெண்ணை தாக்கியதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications