திருத்துறைப்பூண்டி அருகே கொடூரம்.. கேரள ஆம்னி வேனும், அரசு பேருந்தும் மோதிய விபத்தில் 4 பேர் பலி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கேரள மாநிலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவுக்கு வந்த வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற பகுதியில் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா செல்லும் கேரள ஆம்னி வேன் ஒன்று வந்துள்ளது. எதிர்ப்புறமாக அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஆம்னி வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி அதிபயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரள சுற்றுலா வேன் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் ஆம்னி வேன் ஓட்டுநருடன் காரில் பயணம் செய்த ராஜேஷ் (30), ராகுல் (29), சுஜித்( 25) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாபு (25 ), சுனில் (35), ரஜினி (40 ) ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரன் கரட் மற்றும் நாகை மண்டல அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications