பொன்முடியை சும்மா விடாதீங்க.. சர்ச்சை பேச்சால் கொதித்த மன்னார்குடி ஜீயர்.. இந்துக்களுக்கு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: இந்து தர்மத்தை அவமரியாதையாக பேசியக்கூடியவர்களை அரசு அமைச்சர்களாக வைத்துள்ளது. கட்சி பதவியை பறித்தது மட்டுமின்றி தைரியம் இருந்தால் பொன்முடியை கைது செய்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தைரியம் உள்ள இந்துக்கள் யாராக இருந்தாலும் பென்முடியை விடாதீங்க. எங்கே பார்த்தாலும் விரட்டியடிங்க'' என்று மன்னார்குடி ஜீயர் ஆக்ரோஷமாக பேசி உள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ளார். அதனை ஓசி பயணம் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

all-the-hindu-people-should-not-be-take-lightly-on-minister-ponmudi-speech-and-government-should-be

அதன்பிறகு சிறிது காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த அவர் வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் சைவம், வைணவம் உள்ளிட்டவற்றை கூறி விலைமாதுவுடன் சேர்த்து ஆபாசமான கருத்தை கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. பொன்முடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுகவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. கனிமொழி எம்பி கண்டித்தார். இதையடுத்து பொன்முடியிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டது. பொன்முடி திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்தார். இதையடுத்து அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், ‛‛நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ளேன். எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதை புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது. தலைகுனியும் சூழல் ஏற்பட்டது. இதற்கு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இந்நிலையில் தான் இந்து மதம் பற்றி அவதூறாக பேசிய பொன்முடிக்கு எதிராக மன்னார்குடி ஜீயர் கொதித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛ஒரு வெட்கக்கேடு.. அமைச்சர் பொன்முடி.. இந்து மதத்தை கேவலமாக பேசி உள்ளார். இன்று நம்முடைய அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். நமது அரசாங்கமும் தர்ம துரோகிகளையும், இந்து தர்மத்தை அவமரியாதையாக பேசக்கூடியவர்களை தான் அமைச்சர்களாக வைத்து கொண்டுள்ளனர்.

ஓசி.. ஓசி.. ஓசி.. என்று கூறி பெண்களையும் கேவலப்படுத்திய பொன்முடி சமீபத்தில் இந்து தர்மத்தை கேவலமாக பேசியுள்ளார். சைவம், வைணவம் உள்ளிட்டவற்றை அவதூறாக பேசியுள்ளார். திராவிட மாடல் அரசு அவரை பதவியில் இருந்து நீக்கி உள்ளது. என்ன பதவி? கட்சியில் பதவியில் இருந்து நீக்கி உள்ளார். அது என்ன பிரதமர் பதவியா? இல்லை ஜனாதிபதி பதவியா?.

உண்மையான திராணி உள்ள அரசாங்கமாக இருந்தால், தைரியம் இருந்தால் பொன்முடியை கைது செய்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து விரட்ட வேண்டும். இந்து கலாசாரத்தை அவமானமாக பேசக்கூடியது என்பது வெறும் கலாசார விரோதம் மட்டுமின்றி தேசத்துரோக பேச்சு தான் அது. அரசுக்கு தைரியம் இருந்தால் அவரை கைது செய்ய வேண்டும். அதேபோல் தைரியம் உள்ள இந்துக்கள் யாராக இருந்தாலும் அந்த அமைச்சரை விடாதீங்க.. சூடு, சொரணை இருந்தால் பொன்முடியை எங்கே பார்த்தாலும் விரட்டியடிங்க'' என ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+