வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ, அதெல்லாம் தவெக ஆட்சியிலும் நடக்கிறது. தமிழக முதல்வர் விஜய் இன்னொரு முக ஸ்டாலின் ஆக மாறிவிடக் கூடாது எனவும், திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் தவெகவினுடைய ஆட்சியாக உள்ளது. இந்த நிலைமை தொடரக் கூடாது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 40க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Arjun Sampath Vijay dmk

கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் நடக்காத நாள் இல்லை என்கின்ற அளவுக்கு இந்த ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பெண்களுக்கு பாதுகாப்பு போதை பொருள் ஒழிப்பு, லஞ்சம் வாங்குவதில்லை வாங்குபவர்களையும் விடுவதில்லை என்றெல்லாம் பேசினார்.

அர்ஜுன் சம்பத்

அந்தப் பேச்சும் அவர் போட்ட மூன்று கையெழுத்தும் நடைமுறைக்கு வரவில்லை. நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்று ஆகிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய அவர் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, பாட்டிகளுக்குகூட பாதுகாப்பு இல்லை என்று பேசினார். ஸ்டாலின் அங்கிள் ராங் அங்கிள் என்று பேசிய விஜய்யை, பார்த்து நாங்கள் வாட் ப்ரோ வெரி ராங் ப்ரோ என்று சொல்லுகிறோம்.

பாலியல் துன்புறுத்தல்

கோவை, நாகப்பட்டினம் விழுப்புரம் பகுதிகளில் பெண்கள் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியதைப் போல நடவடிக்கை எடுக்க வேண்டும். தீய சக்தி திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததோ தங்களது ஆட்சியிலும் நடக்கிறது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலையை தங்களால் நிறுத்த முடியவில்லை.

விஜய்

போதைப்பொருள் ஒழிப்பேன் என்று கூறினீர்கள் அதனை ஒழிக்க முடியவில்லை. மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்த பலனும் இல்லை டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். நடந்த குற்றங்கள் அனைத்துக்கும் இந்த போதை ஆசாமிகள்தான் காரணமாக உள்ளனர். சிங்கப்பெண் காவல் படை குற்றம் நடைபெறுவதற்கு முன்பாக எந்த குற்றத்தையும் தடுக்கவில்லை. கோவை சிறுமி குறித்து செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் சிரித்துக் கொண்டு பேசுகிறார்கள் அமைச்சர்களும் சிரித்துக் கொண்டு பேசுகிறார்கள் இதெல்லாம் வேதனை தருகிறது.

திராவிட மாடல் 2.0

முதல்வர் விஜய் இன்னொரு மு.க. ஸ்டாலினாக மாறி விடக் கூடாது. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் தவெகவினுடைய ஆட்சியாக உள்ளது. இந்த நிலைமை தொடரக்கூடாது. தமிழகம் திமுக ஆட்சி வந்தவுடன் மின்சார தடை ஏற்பட்டதை போல தவெக ஆட்சி வந்த உடனும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. விஜயின் 100 நாட்கள் ஆட்சிக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தும் திட்டம் ஏதுமில்லை உங்களுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறோம். என்றார்.

கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள்

தீய சக்தி திமுகவை வீழ்த்துவேன் என கூறிய முதல்வர் விஜய் தான் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தினார். அதேபோல் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் வீழ்த்தினார். குறிப்பாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள வன்னியரசு தவெக ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என்று கூறினார். இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதன் கூட்டணி கட்சியினர் மந்திரி சபையிலேயே இடம் பெற்றுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

ஒருபுறம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என கூறுகிறார். மற்றொருபுறத்தில் திமுக கூட்டணி கட்சியினர், தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு வருகிறார்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியவர்கள் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சியினர் முஸ்லிம் லீக்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+