“என் பேர் பைசல் இல்ல.. சஞ்சய்”.. அண்ணாமலையை புகழ்ந்து பேசிய இளைஞர் மறுப்பு! மாட்டிக்கினாரு ஒருத்தரு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அண்ணாமலையை இஸ்லாமிய இளைஞர் ஆதரித்து பேசுவதாக வீடியோ வெளியான நிலையில், தான் முஸ்லிமே இல்லை என்று அந்த இளைஞர் தற்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

"இஸ்லாமிய முதல் தலைமுறை வாக்காளர் எடுத்த சபதம்" என்ற பெயரில் காணொலி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், தன்னை ஃபைசல் என்று அறிமுகம் செய்துகொள்ளும் தொப்பி அணிந்த இளைஞர் ஒருவர் அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சராக வரவேண்டும் என்று பேசி அவரை புகழ்ந்து தள்ளி இருந்தார். அவருக்கு பின்னால் மற்றொரு இளைஞரும் தொப்பி அணிந்து இருந்தார். இந்த நிலையில்தான் அந்த வீடியோவில் பேசிய இளைஞர் இஸ்லாமியரே இல்லை என்பது தெரியவந்தது.

 Boy who praised Annamalai is not Faizal and his real name is Sanjay

அவர் பெயர் பைசல் இல்லை என்றும், திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் என்ற பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் சஞ்சய் என்பதும் தெரிய வந்தது. அவருக்கு பின்னால் குல்லா அணிந்திருந்த இளைஞரின் பெயர் சுமன் என்று கூறப்படுகிறது. சஞ்சய் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூரில் அமைந்து இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இவர் படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞரே தான் பைசல் இல்லை என்று பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது, "என் பெயர் பைசல் இல்லை. என் பெயர் சஞ்சய்.

எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் என்னை பைசல் என்று அழைப்பார்கள். மன்னார்குடியில் அண்ணாமலை யாத்திரை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நான் ஒரு யூடியூப் சேனல் வைத்து உள்ளேன். அப்போது கண்டெண்ட் கிடைக்கும் என்று நண்பர்கள் அழைத்தார்கள். நானும் சென்றேன். அப்போது நண்பர்களின் குல்லாவை எடுத்து போட்டோ எடுத்தேன். அங்கு பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

அங்கு நானே விருப்பப்பட்டுதான் பேசினேன். அப்போது என் பெயர் சஞ்சய் என்று சொன்னவுடன் உன் பெயர் பைசல் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும் அப்படியே சொல்லி பேசினேன். இது மத பிரச்சனையாகிறது என்று சொன்னார்கள். புண்படுத்துவதைபோல் தெரியாமல் செய்துவிட்டேன். இனி அதுபோன்று செய்ய மாட்டேன். நான் கல்லூரிதான் படித்து வருகிறேன். அந்த வீடியோவை பார்த்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு எம்மதமும் சம்மதம்தான்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+