நெல் ஜெயராமனுக்கு சிலை முதல் ரூ.56 கோடியில் மாதிரி பள்ளி வரை.. 6 புதிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் ஜூப்லி பகுதியில் புதிய வணிக வளாகம், ரூ.56 கோடி மாதிரி பள்ளி தொடங்கப்படும், மன்னார்குடியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் வந்தார். நேற்று ஸ்டாலினின் ரோடு ஷோ நடந்த நிலையில், இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் ரூ.846 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளில் 1,234 முடிவுற்ற பணிகளாஇ தொடங்கி வைத்தார். அதேபோல் 2,423 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஸ்டாலின் பேச்சு
இதன்பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், வேளாண்மையும் கலையும் செழித்து வளரும் திருவாரூர் மண்ணில் கலைஞரின் கொள்கை வாரிசாக விழாவில் பங்கேற்கிறேன். திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள். தொட்ட துறையில் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்கு பார்வையால் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி.
எங்களில் ஒருவன்
மற்ற மாவட்டங்களில் உங்களில் ஒருவர் என்று பேசும் என்னை, திருவாரூர் மக்கள் மட்டும் எங்களில் ஒருவன் என்று அழைக்கின்றனர். அமைச்சர் டிஆர்பி ராஜா உயரத்தில் மட்டுமல்லாமல், அவரது செயல்பாடுகளிலும் உயர்ந்து நிற்கிறார். திருவாருரில் 2.37 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். அதேபோல் திருவாரூரில் மட்டும் இதுவரை ரூ.143 கோடி பயிர் காப்பீடு தொகை அளிக்கப்பட்டுள்ளது.
6 அறிவிப்புகள்
திருவாரூரில் சிப்காட் வளாகங்கள் அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நான், சொந்த டெல்டா மாவட்டமான திருவாரூருக்கு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றுவிடுவேனா.. திருவாரூரில் பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட்டில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
மாதிரிப் பள்ளி
அதேபோல் நன்னிலம், வண்டாம்பாளையத்தில் ரூ.56 கோடியில் மாதிரிப் பள்ளி அமைக்கப்படும். மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் புனரமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
நெல் ஜெயராமனுக்கு சிலை
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புகள் திருவாரூர் மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் அம்மாவட்ட மக்கள் கூறி வருகின்றனர்.
-
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications