நெல்லாடிய நிலமெங்கே.. பாளம் பாளமாய் வெடித்த வயல்வெளிகள்! குடிக்கக் கூட தண்ணி இல்ல.. கருகும் டெல்டா!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: எல் நினோவின் தாக்கம் தமிழகத்திலும் தென்பட தொடங்கி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில் குடிநீருக்கு பல இடங்களில் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாததால் டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பச்சைப் பசேலென காட்சி அளித்த வயல்வெளிகள் தற்போது பாளம் பாளமாக வெடித்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் வறண்டு வருகிறது. தற்போது நிலவி வரும் வறட்சியினால் அனைத்து நீர்நிலைகளும் தண்ணீர் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Delta drought Cauvery water Tiruvarur

ஆறுகள், ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்ட நிலையில், பாசன வசதியுடைய குளங்களை தவிர மற்ற குளங்கள் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு கோடை காலம் நிறைவு பெற்ற நிலையில் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வருகிறது.

கடும் வறட்சி

மழையும் பெய்யாமல் உள்ளதால் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது திருவாரூர் மாவட்டம். குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயத்திற்கும் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி நீர் என்ற நிலை தான் இருந்த வருகிறது. அதனால் மேட்டூர் அணை உரிய நீர் மட்டம் இருந்ததால் தான் தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் கர்நாடகா அரசு ஏமாற்றி வருகிறது.

காவிரி நீர்

காவிரி மேலாண்மை ஆணையம் போட்ட உத்தரவை ஒரு முறை கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தீர்ப்பின், ஆணையத்தின் உத்தரவின்படியும் தண்ணீர் திறந்து விடவில்லை. கர்நாடகாவில் கனமழையினால் வெள்ள பெருக்க ஏற்படும் போது, அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளநீரை வெளியேற்ற கூடிய வடிகாலாக தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது.

குறுவை சாகுபடி

சென்ற ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் சாகுபடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஆழ்குழாய் வசதி உள்ள இடங்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. அப்படி ஆழ்துளை கிணறுகளை நம்பி குறுவை சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக மின்மோட்டார்கள் பழுதாகியும் ஒரு சில இடங்களில் உப்பு தண்ணீர் வெளிவந்தும் தண்ணீர் இல்லாமல் பாலம் பாலமாக நிலங்கள் வெடித்து காணப்படுகின்றது.

டெல்டா விவசாயம்

இதனால் இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி பகுதிகளான ஆலத்தம்பாடி, கச்சனம், பாமணி, கொக்கலாடி, விளக்குடி, ராயநல்லூர், எழிலூர், பாண்டி, நெடும்பலம், கள்ளிக்குடி, கட்டிமேடு, தென்பாதி பகுதி விவசாயிகள் குருவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் விவசாய நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து 30,000அல்லது 20,000 என உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

குடிநீர் பஞ்சம்

இந்த நிலை நீடித்தால் அடுத்த கட்ட சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் குடிநீர் பஞ்சம் மிகப்பெரிய அளவில் ஏற்படும். கால்நடைகளுக்கு கூட தண்ணீர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+