திருவாரூர் கரண்ட் கம்பத்தில் தொங்கிய உருவம்.. சுந்தரி அக்காவை சுருட்டி கொண்ட சவப்பெட்டி.. அடகொடுமையே
திருவாரூர்: தம்பியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், சடலத்தின் முன்பு கதறி அழுது கொண்டிருந்தார் சுந்தரி.. ஆனால், அக்காவும் திடீரென இறந்துவிட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது திருவாரூர் மாவட்டத்தில்?
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் வசித்து வருபவர் குருமூர்த்தி.. இவருக்கு 42 வயதாகிறது.. வலங்கைமான் மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருபவர்.

மின்வாரிய ஊழியர்: இந்நிலையில், நேற்றைய தினம் அனியமங்கலத்தில் திடீரென கரண்ட் போயிருக்கிறது.. இது தொடர்பாக புகார் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்துள்ளது. எனவே, குருமூர்த்தி, இந்த மின்தடையை சரிசெய்வதற்காக அனியமங்கலம் வந்துள்ளார்..
அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி, குருமூர்த்தி வேலை செய்து கொண்டிருந்தார்... அதாவது, மின்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியில் கால் வைத்தபடி டிரான்ஸ்பார்மரில் சரிசெய்து கொண்டிருந்தார்..
டிரான்ஸ்பார்மர்: அப்போது அந்த லைனில் நிறுத்தப்பட்டிருந்த மின்சாரம் திடீரென வந்துவிட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் குருமூர்த்தி டிரான்ஸ்பார்மரிலேயே கருகி இறந்துவிட்டார்.. டிரான்ஸ்பார்மரை பிடித்து கொண்டே அவரது சடலம் தொங்கியது காண்போரை கதிகலங்க வைத்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குருமூர்த்தியின் சடலத்தை கயிறு கட்டி கிழே இறக்கினார்கள்.. பிறகு அவரது உடல் வலங்கைமானில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக ஃப்ரீசர் பாக்ஸ்சில் வைக்கப்பட்டது.
இதனால் குருமூர்த்திக்கு, அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.. சடலம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸ் பக்கத்திலேயே குருமூர்த்தியின் சகோதரி சுந்தரியும், அவரது உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர்.
பாய்ந்த மின்சாரம்: அப்போது திடீரென ஃப்ரீசர் பாக்ஸ்ஸிலிருந்து, மின்கசிவு ஏற்பட துவங்கியது.. அடுத்த சில நொடிகளிலேயே ஃப்ரீசர் பாக்ஸ் அருகில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த சுந்தரி, மற்றும் உறவினர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.. இதனால் அனைவருமே அதிர்ச்சியில் கதறினார்கள்.
ஆனாலும், மின்சாரம் உடலில் பாய்ந்த வேகத்தில், சம்பவ இடத்திலேயே சுந்தரி சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.. மேலும் 6 பெண்களுக்கு மின்சாரம் தாக்கியது.
இதனால் அவர்கள் அனைவருமே உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சையும் தற்போது நடந்து வருகிறது. மின்விபத்தில் அக்கா, தம்பி இருவருமே உயிரிழந்த சம்பவம், திருவாரூர் மாவட்டத்தை பதற வைத்து வருகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications