திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் ஆளுநர் ரவி தீவிரம்.. அரசுகள் மறைத்த கலாச்சாரத்தை மீட்குமாம்

Google Oneindia Tamil News

திருவாரூர்: பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுப்பதே புதிய கல்விக்கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தேசிய கல்வி கொள்கை திட்டத்தை சுமூகமாக நடைமுறைப்படுத்தப்படும் - ஆளுநர் ரவி

    திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    சொகுசு கப்பல் போதை வழக்கு.. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மட்டும் தப்பியது எப்படி? 5 முக்கிய காரணங்கள்சொகுசு கப்பல் போதை வழக்கு.. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மட்டும் தப்பியது எப்படி? 5 முக்கிய காரணங்கள்

    கருத்தரங்கத்தில் இந்தியாவில் உள்ள 38 மத்திய பல்கலை கழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    தேசிய கல்விக்கொள்கை கருத்தரங்கம்

    தேசிய கல்விக்கொள்கை கருத்தரங்கம்

    இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன், பெரு நிறுவன ஆட்சி ஆராய்ச்சி மைய நிறுவனர் ஆசிர்வாத ஆச்சார்யா, சிக்ஸா சான்ஸ்கிர்ட் உதான் நயாஸ் தேசிய செயலர் அட்டுல் கோத்தாரி ஆகியோர் கருத்துக்களை வழங்கினர். தொடர்ந்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்கார் காணொலி காட்சி மூலம் கருத்துக்களை வழங்கினர்.

    தேசிய கல்விக்கொள்கை கலாச்சார மீட்பு கொள்கை

    தேசிய கல்விக்கொள்கை கலாச்சார மீட்பு கொள்கை

    பின்னர் பேசிய தமிழக ஆளுநர் ரவி, "தேசிய கல்வி கொள்கை திட்டத்தை பிரச்சினையின்றி சுமூகமாக செயல்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி கொள்கை திட்டத்தை சுமூகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய கல்வி கொள்கை என்பது, பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் கொள்கையாகும். பிரதமரின் பார்வையில் இந்தியா ஒரே பாரதம் உன்ன பாரதம் என்ற இலக்கு உள்ளது. இதற்கு தேசிய கல்வி கொள்கை வழி வகுக்கும்.

    ஆங்கிலேய கல்விக்கொள்கையை சீர்செய்ய வேண்டும்

    ஆங்கிலேய கல்விக்கொள்கையை சீர்செய்ய வேண்டும்

    கடந்த காலங்களில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது 40% இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. படிப்படியாக அதனை ஆங்கிலேயர்கள் அழித்தனர். இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டவர் இங்கிருந்து கொண்டு போய் தங்கள் நாடுகளில் சேர்த்து கொண்டனர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தில் உள்ளீடாகக் கொண்டு செயல்பாட்டில் இருந்த கல்விக் கொள்கையை 75 ஆண்டுகளுக்கு பிறகு சீர் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    வேற்றுமையில் ஒற்றுமை

    வேற்றுமையில் ஒற்றுமை


    இந்தியா என்கின்ற பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு, ஆனால் சமீபகாலமாக வேற்றுமையை வேற்றுமையாக பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் நலன் பயக்கும் வகையில் திட்டங்களை வகுக்கின்றனர். அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துவதால் அதன் இலக்கை அடைய முடிவதில்லை. தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமான நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும். சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் பாடலை குறிப்பிட்டு அவர், நாட்டில் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த வேண்டும். இந்த தேசிய கல்விக் கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கம் இது குறித்த தெளிவை உருவாக்க அடித்தளமாக அமையும்." என்றார்.

    English summary
    Governor RN Ravi is keen in National Education Policy to be implemented
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X