'திருவாரூர்' தமிழகத்திற்கே வழிகாட்டி.. காட்டூர் ஊராட்சியில் 100% தடுப்பூசி.. மா.சுப்ரமணியன் தகவல்
திருவாரூரில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்
திருவாரூர்: தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் தமிழகத்திற்கே வழிகாட்டி திருவாரூர் மாவட்டம் தான் என்றும், காட்டூர் என்ற ஊராட்சி தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான ஊராட்சியாக விளங்குகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது.. இதற்காக சுகாதாரத்துறையும் முழுவீச்சில் செயல்படு வருகிறது.. தடுப்பூசி முகாம்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவாரூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பேட்டி
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். மதுப்பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடுவதால் பெரும்பாலும் தடுப்பூசி போட சாக்குபோக்கு சொல்கிறார்கள், அதனால் தான் முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளது.. இன்று மதியம் ஒன்றரை மணி நிலவரப்படி தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன...

இலக்கு
அதிலும் குறிப்பாக 2வது டோஸ் செலுத்துபவர்கள் ஆர்வமாக செலுத்தி கொள்கின்றனர்... இன்று மாலை 7 மணி வரை இந்த முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும், திருவாரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 61.4 சதவீதம் ஆவர்.. இன்று மாலைக்குள் இந்த சதவீதமானது மேலும் அதிகரிக்கும். அதேபோல, மாவட்டத்தில் 6வது தடுப்பூசி முகாம் 500 இடங்களில் நடந்து வருகிறது.. இன்று 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

கையிருப்பு
இப்போதைக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன... திருவாரூர் மாவட்டம் தான் தமிழகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது, காரணம், திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்ற ஊராட்சியில் அனைவருமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்கள்.. காட்டூர் என்ற ஊராட்சி தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான ஊராட்சியாக விளங்குகிறது.

கோரிக்கை
இந்த மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.. அதன்படி19 துணை சுகாதார நிலையங்கள் தலா 30 லட்சம் வீதம் சீரமைக்கப்படும்... அதேபோல, திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 40 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன... ஆகமொத்தம், இந்த நிதியாண்டில் 8 கோடியே 37 லட்ச ரூபாய் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி
தற்போது மத்திய அரசு தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.. கல்லூரியில் சேரும் மாணவர்கள் 17 - 18 வயதுக்கு உட்பட்ட நபர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுள்ளோம்.. இதுகுறித்து முடிவு எடுத்து அறிவித்தால் விரைவில் தமிழகத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும்... சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை பரவி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் தினசரி பதிவாகும் கொரோனா கேஸ்களும் அதிகரித்து வருகிறது.

தளர்வுகள்
ஆனால், இப்போதைக்கு நம் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைகிறது.. அதற்காக பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது.. மாஸ்க் அணிய வேண்டும்.. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் தீர்வு தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான். விழாக்காலம் என்பதற்காக கொரோனா விதிமுறைகளில் தளர்வு கிடையாது" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications