ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடல் தங்கம் என்றழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர், அம்பர்கிரீஸ் என்ற பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன.
திமிலங்கத்தின் உமிழ்நீருக்கு ஏன் இப்படி ஒரு மவுசு என்பதை இங்கே பார்க்கலாம்.

அம்பர்கிரீஸ்
திமிங்கலத்தின் உமிழ்நீராக கருதப்படும் அம்பர்கிரீஸ் மூலம் உயர் ரக வாசனைத் திரவியங்களும், உயர் ரக மதுபானத்திற்கான வாசனையூட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமிருக்கும் துபாயில் இதற்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது.

குறுக்கு வழி
இதனால் குறுக்கு வழிகளில் முன்னேற வேண்டும் என துடிப்பவர்களது முதல் சாய்ஸ் திமிங்கல உமிழ்நீர் விற்பனையாகத் தான் இருக்கும். திமிங்கலத்தால் கடலில் கக்கப்படும் உமிழ்நீரானது, கடல் நீராலும், சூரிய ஒளியாலும், பல்வேறு நிறங்களுக்கு மாறி படிமங்களாகின்றன. இவைகள் சில நேரங்களில் மீனவர்கள் வலைகளில் சிக்குவதும் உண்டு, சில நேரங்களில் கடல் அலையால் கரை ஒதுக்கப்படுவதும் உண்டு.

இந்தியாவில் தடை
இந்தியாவை பொறுத்தவரை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டவிதிப்படி திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்வதும், பொதுமக்கள் பயன்படுத்துவதும் தவறாகும். இருப்பினும் பல இடங்களில் அம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கடத்தல் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக இது போன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபடும் யாரும், தனி நபராக செயல்பட மாட்டார்கள். நான்கைந்து பேர் கொண்ட கும்பலாக தான் இதில் ஈடுபடுவார்கள்.

ரூ.8 கோடி
அதில் விற்பனை செய்யும் போது ஏற்படும் கருத்து வேறுபாடும், பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்சனையும் காவல்துறையிடம் போட்டுக்கொடுப்பது வரை செல்லும். அப்படித்தான் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸின் மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத முறையில் அவர்கள் துபாய்க்கு கொண்டு செல்ல இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை
இதனிடையே கைது செய்யப்பட்ட முத்துப்பேட்டை நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகி நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரிடமும் திமிங்கல் உமிழ்நீர் எப்படி கிடைத்தது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications