"உன் மகன் எனக்கு பிறக்கல".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி!
கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
திருவள்ளூர்: குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றதும் இல்லாம, தினமும் சந்தேகம் வேற.. "உன் மகன் எனக்கு பிறக்கல" என்று சொல்லவும்தான், கணவனை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொன்றார் கவுரி. இவருக்கு நீதிமன்றம் இப்போது ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
திருவள்ளூரை அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் ஒரு கூலி தொழிலாளி. கவுரி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். கவுரிக்கு 25 வயது!

ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது.. மனைவி மீது சந்தேகமும் இருந்தது. இதனால் தினமும் ராத்திரியில் சண்டையும், தகராறும் நடந்து வந்தது. "ஆகாஷ் எனக்கு பிறக்கவில்லை, அவனை கொன்னுட போறேன்.. பார்த்துட்டே இரு" என்று அடிக்கடி சொல்லியும், கவுரியையும் சரமாரியாக தாக்கியும் வந்திருக்கிறார்.
இதில் அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் கவுரி. இப்படித்தான் சம்பவத்தன்றும், இதேபோல சண்டை நடக்கவும், கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுவிட்டார். பிணத்தை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு கதவையும் பூட்டி கொண்டு, குழந்தையுடன் மாயமானார்.
2 நாள் கழித்து வீட்டில் இருந்து நாற்றம் வரவும்தான் அக்கம்பக்கத்தினர் பட்டாபிராம் போலீசுக்கு தகவல் வந்து விசாரணை ஆரம்பமானது. பிறகு தலைமறைவாக இருந்த கவுரியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் வருஷம் நடந்தது.
இது சம்பந்தமான விசாரணையும், திருவள்ளூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில், கவுரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, போலீசார் கவுரியை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications