நெல் ஜெயராமனின் உடல் தகனம்.. கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்!
நெல் ஜெயராமனின் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video

திருவாரூர்: இயற்கை வேளாண் விவசாயி நெல் ஜெயராமனின் உடல், அவரின் சொந்த ஊரான கட்டிமேட்டில் தகனம் செய்யப்பட்டது.
இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்தில் இன்று இறுதி ஊர்வலம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக பார்க்கப்பட்டவர். இதுவரை 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்த பெருமை நெல் ஜெயராமனை சாரும்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வருட காலமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்செய்தி அவரது சொந்த ஊரான கட்டிமேடு கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் இன்று காலை நெல் ஜெயராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், ஒரு மணி அளவில் நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, பி.ஆர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நெல் ஜெயராமனின் மகனின் கல்விச் செலவுயும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போது திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் நெல் ஜெயராமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள், விவசாயிகள் எல்லோரும் அவருக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications