லண்டன் மாப்பிள்ளை டூ கோழிக்கடை.. போனிலேயே பேசி மனதை பறிகொடுத்த திருவாரூர் பெண்.. அங்கேதான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூரில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.. மாப்பிள்ளை லண்டனில் வேலை பார்க்கிறார் என்பதால், பெண் வீட்டினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தனர்.. மணப்பெண்ணும், லண்டன் மாப்பிள்ளையை மணப்பதற்காக தயாரானார்.. ஆனால், திடீரென நடந்த இந்த சம்பவம், மொத்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது?

திருவாரூர் நகர் வடக்கு வீதியில் வசித்து வருபவர் குமார். 60 வயதான இவர், கீழ்த்தளத்தில் சைக்கிள் ரிப்பேர் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மீராவுக்கு 55 வயது. இவர்களுடைய மகள் ஸ்ரீலேகா. 24 வயதான இவர் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார்.

London Groom

மயிலாடுதுறை மாப்பிள்ளை

மயிலாடுதுறையை சேர்ந்த அந்த இளைஞர் ஒருவர் லண்டனில் வேலை பார்த்து வருவதாகவும், அவருக்கு பெண் தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, ஸ்ரீலேகாவுக்கு அந்த லண்டன் மாப்பிள்ளையையே பேசி முடித்தார்கள். இதனால் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது..

இதையடுத்து அந்த இளைஞருடன் ஸ்ரீலேகா செல்போனில் தொடர்ந்து பேசி பழகி வந்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் நெருக்கமும் அதிகமாகி கொண்டே வந்தது.. மற்றொருபுறம் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது.. லண்டனில் வேலை பார்த்து வருவதால், அதற்கேற்றபடி ஏற்பாடுகள் துவங்கின..

லண்டன் மாப்பிள்ளை

அதற்கு பிறகுதான், மாப்பிள்ளை லண்டனில் வேலை பார்க்கவில்லை என்றும், மயிலாடுதுறையில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டு, லண்டனில் வேலை பார்ப்பதாக பொய் தகவல் தெரிவித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீலேகாவின் பெற்றோர், அந்த இளைஞரை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலேகாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீலேகா இதற்கு சம்மதிக்கவில்லை... "இத்தனை நாட்களும், அவரை திருமணம் செய்வதாக மனதில் நினைத்துவிட்டேன்.. செல்போனில் தொடர்ந்து பேசி பழகிவிட்டேன், அந்த இளைஞரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று பெற்றோரிடம் கறாராக சொல்லி உள்ளார்..

மனதை பறி கொடுத்த திருவாரூர் ஸ்ரீலேகா

இதனால் ஸ்ரீலேகாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. திருமண விஷயத்தில் யார் சொல்வது சரி என்ற பிரச்சினை தொடர்ந்து இருந்த நிலையில், நேற்று காலையும் வீட்டில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த ஸ்ரீலேகா, கீழ்த்தளத்தில் தனது அப்பா குமார் நடத்தி வந்த சைக்கிள் ரிப்பேர் கடைக்குச் சென்றார்.. அங்கு இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு நெருப்பும் வைத்து கொண்டார்.. இதில் ஸ்ரீலேகாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குமார், மகளை காப்பாற்ற ஓடிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால், உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த ஸ்ரீலேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கருகி உயிரிழந்தார்.

கோழிக்கடை

படுகாயம் அடைந்த குமாரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனில் வேலை பார்க்கிறார் என்று சொல்லப்பட்ட மாப்பிள்ளை, உண்மையில் மயிலாடுதுறையில் கோழிக்கடையில் வேலை பார்த்தது தெரியவந்தாலும், போனில் பேசி மனதைப் பறிகொடுத்த ஸ்ரீலேகா அவரை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அந்த கறால் முடிவில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கடைசியில் அவரது உயிரையே பறித்துவிட்டது பெரு சோகம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+