திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் 5-ஆம் ஆண்டு மாணவி தற்கொலை- மாணவர்கள் அதிர்ச்சி!
திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வந்த நாமக்கலைச் சேர்ந்த மாணவி, கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த ஒரு மாதங்களில் பல்வேறு இடங்களில் மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருவது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி என்பவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் தனி அறையில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காயத்ரி இன்று காலை முதலே அறையை விட்டு காயத்ரி வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் காயத்ரி அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்பதால், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவி காயத்ரியை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் காயத்ரியின் நண்பர்கள் சோகத்தில் உறைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி காயத்ரி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். மாணவி எழுதியுள்ள கடிதத்தில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications