நாகூர் தர்காவில் அமைச்சர் ஆவடி நாசர்! வெள்ளிக்கிழமை தொழுகையும் மனம் உருகி பிரார்த்தனையும்!
நாகை: இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவுக்கு சென்ற அமைச்சர் ஆவடி நாசர், அங்கு சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வுக்கு சென்ற அவர், வெள்ளிக்கிழமையான நேற்று நாகூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் மதிய தொழுகையில் பங்கேற்று விட்டு அதை தொடர்ந்து அங்கு சிறப்பு து ஆவும் செய்தார்.
அமைச்சராக இருக்கிற போதும் ஆவடி நாசரிடம் அதற்குரிய எந்த படோடாபமும் இல்லாததை கண்ட உள்ளூர்வாசிகள் அதை தங்களுக்குள் பேசு பொருளாக வைத்துக்கொண்டனர்.

அமைச்சர் நாசர்
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரை பொறுத்தவரை மதப் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அதேவேளையில் கட்சிப் பணிகள் என வந்துவிட்டால், அதனை முறையாக செய்யாதவர்கள் மீது கடுமை காட்டவும் தவறாதவர். மனதில் தோன்றும் கருத்தை ஒளிவு மறைவின்றி பேசக்கூடிய இவர், தனது துறைரீதியான வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சிறப்பு பிரார்த்தனை
அந்த வகையில் மாவட்ட வாரியாக ஆய்வுப்பணிகளை செய்து வரும் அவர், டெல்டா பகுதிக்கும் நேற்று ஒரு விசிட் அடித்திருக்கிறார். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொழுகையில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்ட அமைச்சர் நாசர், நேற்று புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

சிறப்பு வரவேற்பு
அப்போது தன்னுடன் வந்த பி.எஸ்.ஓ., காவலர்கள் என அனைவரையும் உடன் அழைத்துச்செல்லாமல் மிகவும் எளியமையாக தாம் மட்டுமே தர்காவுக்குள் சென்றார். அமைச்சரை கண்ட உள்ளூர்வாசிகள் பலரும் தங்களை தாங்களாகவே அறிமுகம் செய்துகொண்டு கைகொடுக்க ஆர்வம் காட்டினர். இதனிடையே அமைச்சருக்கு நாகூர் தர்கா கலீஃபா (பரம்பரை டிரஸ்ட்) சிறப்பு வரவேற்பு கொடுக்க முனைந்த போது, அதனை வேண்டாம் என தவிர்த்துவிட்டார் ஆவடி நாசர்.

தர்கா வரலாறு
அமைச்சர் ஆவடி நாசரிடம் நாகூர் தர்காவின் வரலாற்றை அதன் கலீஃபா விவரமாக எடுத்துக்கூறினார். இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முன்னாள் எம்.பி.ஹாரூன் ரஷீத், உள்ளிட்ட இன்னும் பல இஸ்லாமிய பிரமுகர்கள் நாகூர் தர்காவுக்கு வழக்கமாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications